அத்தியாயம்: 22, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2899

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: ‏
عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏أَجْلَى ‏ ‏الْيَهُودَ ‏ ‏وَالنَّصَارَى ‏ ‏مِنْ أَرْضِ ‏ ‏الْحِجَازِ ‏ ‏وَأَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا ظَهَرَ عَلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏أَرَادَ إِخْرَاجَ ‏ ‏الْيَهُودِ ‏ ‏مِنْهَا وَكَانَتْ الْأَرْضُ حِينَ ظُهِرَ عَلَيْهَا لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِلْمُسْلِمِينَ فَأَرَادَ إِخْرَاجَ ‏ ‏الْيَهُودِ ‏ ‏مِنْهَا فَسَأَلَتْ ‏ ‏الْيَهُودُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُقِرَّهُمْ بِهَا عَلَى أَنْ يَكْفُوا عَمَلَهَا وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُقِرُّكُمْ بِهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا فَقَرُّوا بِهَا حَتَّى ‏ ‏أَجْلَاهُمْ ‏ ‏عُمَرُ ‏ ‏إِلَى ‏ ‏تَيْمَاءَ ‏ ‏وَأَرِيحَاءَ

உமர் பின் அல்கத்தாப் (ரலி), யூதர்களையும் கிறித்தவர்களையும் (தமது ஆட்சியின்போது) ‘ஹிஜாஸ்’ மாநிலத்திலிருந்து நாடு கடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கைபரை வெற்றி கொண்டபோதே அங்கிருந்த யூதர்களை வெளியேற்றிவிட உமர் (ரலி) விரும்பினார்கள். ஏனெனில், அந்தப் பிரதேசம் வெற்றிகொள்ளப்பட்ட பின் அது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. ஆகவேதான், யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள்.

முன்னதாக, யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நாங்கள் இங்கேயே தங்கி, இந்த விளைநிலங்களில் பயிரிட்டு உழைக்கும் பொறுப்பை ஏற்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக்கொள்கிறோம் (மீதியை மதீனா அரசுக்குச் செலுத்திவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதன்படி நாம் விரும்பும்வரை நீங்கள் இங்கே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்” என்று கூறியிருந்தார்கள்.

பின்னர், உமர் (ரலி) தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை ‘தைமா’  ‘அரீஹா (ஜெரிக்கோ)’ ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (விளைநிலங்களைப் பயிரிட்டு, வரி செலுத்தி) வசித்துவந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith: