அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2986

و حَدَّثَنَا ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَزَعَةَ الْبَاهِلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ: ‏
أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِتَمْرٍ فَقَالَ مَا هَذَا التَّمْرُ مِنْ تَمْرِنَا فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ بِعْنَا تَمْرَنَا ‏ ‏صَاعَيْنِ ‏ ‏بِصَاعٍ ‏ ‏مِنْ هَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏هَذَا الرِّبَا فَرُدُّوهُ ثُمَّ بِيعُوا تَمْرَنَا وَاشْتَرُوا لَنَا مِنْ هَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அவர்கள், “இது நம் பேரீச்சம் பழங்கள் போல் இல்லையே!” என்று கேட்டார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதரே! நம் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்துவிட்டு, இ(ந்தத் தரமான பேரீச்சம் பழத்)தில் ஒரு ‘ஸாஉ’ வாங்கினோம்” என்று (பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்த) அந்த மனிதர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது வட்டியாகும். இதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; பிறகு நமது பேரீச்சம் பழத்தை (விலைக்கு) விற்றுவிட்டு, (அந்தத் தொகையின் மூலம்) நமக்காக இந்தப் பேரீச்சம் பழத்தை வாங்குங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)