அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3061

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ :‏

قَالَتِ امْرَأَةُ بَشِيرٍ انْحَلِ ابْنِي غُلاَمَكَ وَأَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ ابْنَةَ فُلاَنٍ سَأَلَتْنِي أَنْ أَنْحَلَ ابْنَهَا غُلاَمِي وَقَالَتْ أَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَلَهُ إِخْوَةٌ ‏”‏ ‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ أَفَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ مَا أَعْطَيْتَهُ ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَلَيْسَ يَصْلُحُ هَذَا ‏ وَإِنِّي لاَ أَشْهَدُ إِلاَّ عَلَى حَقٍّ ‏”‏

பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்களின் துணைவியார் பஷீர் (ரலி) அவர்களிடம், “என்னுடைய இந்த மக(நுஅமா)னுக்கு உங்களுடைய அடிமையை அன்பளிப்பாக வழங்கிவிடுங்கள்” என்று கூறிவிட்டு, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குங்கள்” என்றார். அவ்வாறே பஷீர் பின் ஸஅத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இன்ன மனிதரின் (ரவாஹாவின்) மகள், தன் மகனுக்கு என்னுடைய அடிமையை அன்பளிப்பாக வழங்குமாறு என்னிடம் கேட்டுவிட்டு, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கும்படி கூறுகிறாள்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அ(வளுடைய புதல்)வருக்குச் சகோதரர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். பஷீர் “ஆம்” என்றார்கள். “இவருக்கு அன்பளிப்புச் செய்ததைப் போன்று அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்புச் செய்தீரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். பஷீர் “இல்லை” என்றார்கள். “இது தகாத செயலாகும். நான் நியாயத்திற்கு மட்டுமே சாட்சியாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3060

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَزْهَرُ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ:‏

نَحَلَنِي أَبِي نُحْلاً ثُمَّ أَتَى بِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيُشْهِدَهُ فَقَالَ ‏”‏ أَكُلَّ وَلَدِكَ أَعْطَيْتَهُ هَذَا ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ أَلَيْسَ تُرِيدُ مِنْهُمُ الْبِرَّ مِثْلَ مَا تُرِيدُ مِنْ ذَا ‏”‏ ‏ قَالَ بَلَى ‏.‏ قَالَ ‏”‏ فَإِنِّي لاَ أَشْهَدُ ‏”‏


قَالَ ابْنُ عَوْنٍ فَحَدَّثْتُ بِهِ مُحَمَّدًا فَقَالَ إِنَّمَا تَحَدَّثْنَا أَنَّهُ قَالَ ‏”‏ قَارِبُوا بَيْنَ أَوْلاَدِكُمْ ‏”‏ ‏.‏

என் தந்தை எனக்கு ஓர் அன்பளிப்புப் பொருளை வழங்கினார்கள். பிறகு அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவதற்காக என்னை அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் இதை வழங்கினீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரிடமிருந்து நீர் நன்மையை எதிர்பார்ப்பதைப் போன்று அவர்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றீரா இல்லையா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம் (எதிர் பார்க்கிறேன்)” என்றார்கள். “அவ்வாறாயின், நான் (இதற்குச்) சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) கூறுகின்றார்:

இதை நான் முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது, “உங்கள் பிள்ளைகளை (இயன்றவரை)ச் சமமாக நடத்துங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள் என்றே நாம் அறிவித்துவருகிறோம் என்றார்கள்.

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3059

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، وَعَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ – وَاللَّفْظُ لِيَعْقُوبَ – قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، بْنُ إِبْرَاهِيمَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ:‏

قَالَ انْطَلَقَ بِي أَبِي يَحْمِلُنِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ كَذَا وَكَذَا مِنْ مَالِي ‏.‏ فَقَالَ ‏”‏ أَكُلَّ بَنِيكَ قَدْ نَحَلْتَ مِثْلَ مَا نَحَلْتَ النُّعْمَانَ ‏”‏ ‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي – ثُمَّ قَالَ – أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا إِلَيْكَ فِي الْبِرِّ سَوَاءً ‏”‏  قَالَ بَلَى ‏.‏ قَالَ ‏”‏ فَلاَ إِذًا ‏”‏

என் தந்தை (சிறுவனாயிருந்த) என்னைத் தூக்கிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகன்) நுஅமானுக்கு என் செல்வத்திலிருந்து இன்னின்ன பொருட்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டேன் என்பதற்குத் தங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நுஅமானுக்கு அன்பளிப்பாக வழங்கியதைப் போன்று உங்கள் மகன்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கிவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறாயின், இதற்கு வேறு யாரையாவது சாட்சியாக்கிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “அவர்கள் அனைவரும் உங்களுக்குச் சம அளவில் நன்மை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எனில், இப்படிச் செய்யக் கூடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3058

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَبِيهِ ‏ “‏ لاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தந்தையிடம், “என்னை அநீதிக்குச் சாட்சியாக்காதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3057

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ أَلَكَ بَنُونَ سِوَاهُ ‏”‏ ‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ فَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ هَذَا ‏”‏  قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَلاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என் தந்தையிடம்), “உமக்கு இவரைத் தவிர வேறு மகன்கள் உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம்” என்றார்கள். “அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்று (அன்பளிப்பு) கொடுத்தீரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அதற்கு என் தந்தை “இல்லை” என்றார்கள். “அப்படியானால், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மறுத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3056

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، ح. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ:‏

أَنَّ أُمَّهُ بِنْتَ رَوَاحَةَ، سَأَلَتْ أَبَاهُ بَعْضَ الْمَوْهِبَةِ مِنْ مَالِهِ لاِبْنِهَا فَالْتَوَى بِهَا سَنَةً ثُمَّ بَدَا لَهُ فَقَالَتْ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَا وَهَبْتَ لاِبْنِي ‏.‏ فَأَخَذَ أَبِي بِيَدِي وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ هَذَا بِنْتَ رَوَاحَةَ أَعْجَبَهَا أَنْ أُشْهِدَكَ عَلَى الَّذِي وَهَبْتُ لاِبْنِهَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا بَشِيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا ‏”‏ ‏‏ قَالَ نَعَمْ ‏.‏ فَقَالَ ‏”‏ أَكُلَّهُمْ وَهَبْتَ لَهُ مِثْلَ هَذَا ‏”‏ ‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَلاَ تُشْهِدْنِي إِذًا فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ ‏”‏

என் தாயார் (அம்ரா) பின்த்தி ரவாஹா (ரலி), என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு அவருக்குத் தோன்றியபோது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக) வழங்கினார். அப்போது என் தாயார் “என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.

ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த்தி ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கியதற்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பஷீர்! இவரைத் தவிர வேறு பிள்ளை/கள் உமக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம்” என்றார்கள். “அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்று சொன்னார்கள். “அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மறுத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3055

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ :‏

تَصَدَّقَ عَلَىَّ أَبِي بِبَعْضِ مَالِهِ فَقَالَتْ أُمِّي عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَانْطَلَقَ أَبِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لِيُشْهِدَهُ عَلَى صَدَقَتِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَفَعَلْتَ هَذَا بِوَلَدِكَ كُلِّهِمْ ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ اتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا فِي أَوْلاَدِكُمْ ‏”‏ ‏ فَرَجَعَ أَبِي فَرَدَّ تِلْكَ الصَّدَقَةَ ‏.‏

என் தந்தை தமது செல்வத்தில் சிலதை (நான் சிறுவனாக இருந்தபோது) எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த்தி ரவாஹா (ரலி) என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தந்தையிடம், “உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே சமநீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பிவந்து, அந்த தானத்தை ரத்துச் செய்து திரும்ப வாங்கிக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3054

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ بَشِيرٍ قَالَ :‏

وَقَدْ أَعْطَاهُ أَبُوهُ غُلاَمًا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ مَا هَذَا الْغُلاَمُ ‏”‏ ‏.‏ قَالَ أَعْطَانِيهِ أَبِي ‏.‏ قَالَ ‏”‏ فَكُلَّ إِخْوَتِهِ أَعْطَيْتَهُ كَمَا أَعْطَيْتَ هَذَا ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَرُدَّهُ ‏”‏ ‏

என் தந்தை (சிறுவனாக இருந்த) எனக்கு ஓர் அடிமையை (அன்பளிப்பாக) வழங்கியிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) என் தந்தையிடம், “யார் இந்த அடிமை?” என்று கேட்டார்கள். அதற்கு “என் தந்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கியவர்” என்று (குறுக்கிட்டு) நான் சொன்னேன். நபி (ஸல்), “இவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் இவருக்கு வழங்கியதைப் போன்று வழங்கினீரா?” என்று (என் தந்தையிடம்) கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்வீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3053

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ:‏

أَتَى بِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا ‏.‏ فَقَالَ ‏”‏ أَكُلَّ بَنِيكَ نَحَلْتَ ‏”‏ ‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَارْدُدْهُ ‏”‏ ‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ أَمَّا يُونُسُ وَمَعْمَرٌ فَفِي حَدِيثِهِمَا ‏”‏ أَكُلَّ بَنِيكَ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ اللَّيْثِ وَابْنِ عُيَيْنَةَ ‏”‏ أَكُلَّ وَلَدِكَ ‏”‏ ‏.‏ وَرِوَايَةُ اللَّيْثِ عَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ وَحُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ بَشِيرًا جَاءَ بِالنُّعْمَانِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை என் தந்தை அழைத்துச் சென்று, “சிறுவனான என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை நான் அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் மகன்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அப்படியானால், அடிமையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)


குறிப்புகள் :

யூனுஸ் (ரஹ்), மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “உங்கள் மகன்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினீர்களா?” என்று இடம்பெற்றுள்ளது. லைஸ் (ரஹ்) இப்னு உயைனா ஆகியோரது அறிவிப்பில் “உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினீர்களா?” என இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் நுஅமான் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோர் வழியாக லைஸ் (ரஹ்) அறிவிப்பில் “பஷீர் பின் ஸஅத் (ரலி) (தம் மகன்) நுஅமான் (ரலி) அவர்களுடன் வந்தார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3052

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، يُحَدِّثَانِهِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ:‏

أَنَّهُ قَالَ إِنَّ أَبَاهُ أَتَى بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا كَانَ لِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا ‏”‏  فَقَالَ لاَ، ‏‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ فَارْجِعْهُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை என் தந்தை அழைத்துச் சென்று, “நான் சிறுவனான இந்த என்னுடைய மகனுக்கு என்னிடமிருந்த ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்றே அன்பளிப்பு வழங்கியுள்ளீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், அதை(அன்பளிப்பை)த் திரும்பப் பெற்றுக்கொள்க” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)