அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3791

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ ‏”‏ ‏


وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، – يَعْنِي ابْنَ مَهْدِيٍّ – قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ وَلْيَسْلُتْ أَحْدُكُمُ الصَّحْفَةَ ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ أَوْ يُبَارَكُ لَكُمْ ‏”‏ ‏

“உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை சூப்பிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் அருள்வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஹம்மாது (ரஹ்) வழி அறிவிப்பில். “உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்” என்றும், உங்களின் “எந்த உணவில் அருள்வளம் உள்ளது / அல்லது (உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு அருள்வளம் வழங்கப்படும் (என்பதை அவர் அறியமாட்டார்)” என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3790

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ قَالاَ حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ ‏‏ قَالَ وَقَالَ ‏”‏ إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الأَذَى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ ‏”‏ ‏.‏ وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ قَالَ ‏”‏ فَإِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதேனும் உணவை உண்டால் (இறுதியில்) மூன்று விரல்களை சூப்பிக்கொள்வார்கள். மேலும், “உங்களில் ஒருவரது உணவுக் கவளம் (உண்ணும் போது) கீழே விழுந்துவிட்டால், அதில் பட்டதை நீக்கி(சுத்தப்படுத்தி)விட்டு, உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்” என்றும் அவர்கள் கூறினார்கள்.

உணவுத் தட்டையும் இறுதியில் வழித்து உண்ணுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள். “ஏனெனில் உங்களின் எந்த உணவில் அருள்வளம் உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3789

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ:‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَىْءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمُ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ لْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ ‏”‏ ‏‏


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏”‏ إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ ‏”‏ ‏.‏ إِلَى آخِرِ الْحَدِيثِ وَلَمْ يَذْكُرْ أَوَّلَ الْحَدِيثِ ‏”‏ إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ ‏”‏

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ وَأَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ذِكْرِ اللَّعْقِ ‏.‏ وَعَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرَ اللُّقْمَةَ نَحْوَ حَدِيثِهِمَا ‏

“உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கின்றான். மனிதன் உணவு உண்ணும்போதும் அவன் பங்கேற்கின்றான். (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் (தவறி) கீழே விழுந்துவிட்டால், அதில் பட்டதை, சுத்தப்படுத்திவிட்டுப் பிறகு உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்.

உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை சூப்பிக்கொள்ளட்டும். ஏனெனில், அவரது உணவில் எந்தப் பகுதியில் அருள்வளம் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பு, “உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் (தவறிக் கீழே) விழுந்துவிட்டால் …” என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது. “உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான்” எனும் ஆரம்பக் குறிப்பு இடம்பெறவில்லை.

முஹம்மது பின் ஃபுழைல் (ரஹ்) வழி அறிவிப்பில், கை விரல்களை சூப்பிக் கொள்வது தொடர்பாக இடம்பெற்றுள்ளது. அபூஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், உணவுக் கவளம் (தவறிக் கீழே) விழுந்துவிடுவது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3788

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيَأْخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ وَلاَ يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ الْبَرَكَةُ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، ح وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، كِلاَهُمَا عَنْ سُفْيَانَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏ وَفِي حَدِيثِهِمَا ‏ “‏ وَلاَ يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا ‏”‏ ‏.‏ وَمَا بَعْدَهُ

“உங்களில் ஒருவர் உண்ணும் உணவுக் கவளம் (தவறிக் கீழே) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், (உண்ட பின்) தம் விரல்களை சூப்புவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் அருள்வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “தமது கையைத் தாமே சூப்பாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) சூப்பத் தராமல் அதைக் கைக்குட்டையால் துடைத்துவிட வேண்டாம்” என்பதும் அதற்குப் பின்னுள்ள தகவல்களும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3787

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ ‏ “‏ إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ ‏”‏

நபி (ஸல்), (உணவு உண்டு முடித்தவர், தம்) விரல்களைச் சூப்புமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், “உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3786

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، – أَوْ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ – أَخْبَرَهُ عَنْ أَبِيهِ كَعْبٍ أَنَّهُ حَدَّثَهُمْ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ فَإِذَا فَرَغَ لَعِقَهَا


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ، وَعَبْدَ اللهِ بْنَ كَعْبٍ، حَدَّثَاهُ، أَوْ أَحَدُهُمَا عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களைச் சூப்புவார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் மாலிக் (ரலி)  வழியாக அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) / அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3785

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالُوا حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَلْعَقُ أَصَابِعَهُ الثَّلاَثَ مِنَ الطَّعَامِ‏


وَلَمْ يَذْكُرِ ابْنُ حَاتِمٍ الثَّلاَثَ ‏.‏ وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ فِي رِوَايَتِهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ  حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَنْ يَمْسَحَهَا‏

நபி (ஸல்) உணவு உண்ட பின் தம்முடைய மூன்று விரல்களை  சூப்புவதை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : கஅப் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஹாத்திம் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘மூன்று’ எனும் குறிப்பு இல்லை.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விரல்களால் உணவு உண்பார்கள். (உண்டு முடித்த பின்) கையைத் துடைப்பதற்கு முன் விரல்களை சூப்புவார்கள்” என்று கஅப் பின் மாலிக் (ரலி) கூறியதாக அன்னாரின் மகன் அறிவிக்கின்றார்.

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3784

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي أَبُو عَاصِمٍ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ عَطَاءً، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ مِنَ الطَّعَامِ فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا ‏”‏ ‏

“உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது விரல்களைத் தாமே சூப்பாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) சூப்பத் தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 18, ஹதீஸ் எண்: 3783

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا – سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا ‏”‏

“உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே சூப்பாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) சூப்பத் தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)