அத்தியாயம்: 5, பாடம்: 23, ஹதீஸ் எண்: 914

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏وَمَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْمَرٍ ‏

أَنَّ أَمِيرًا كَانَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنَّى ‏ ‏عَلِقَهَا ‏ ‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فِي حَدِيثِهِ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُهُ

மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஒருவர் (தொழுகையை முடிக்கும்போது) இருமுறை ஸலாம் கூறுபவராயிருந்தார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த (வழி)முறையை இவர் அறிந்ததெப்படி?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அபூமஅமர் (ரஹ்)

குறிப்பு :

ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில் கூடுதலாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்வார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது.