அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 984

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ‏ ‏حَيَّةٌ ‏ ‏فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى ‏ ‏الْعَوَالِي ‏ ‏فَيَأْتِي ‏ ‏الْعَوَالِيَ ‏ ‏وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ‏

وَلَمْ يَذْكُرْ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏فَيَأْتِي ‏ ‏الْعَوَالِيَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ ‏ ‏بِمِثْلِهِ سَوَاءً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (சாயாமல்) உயர்ந்து தெளிவாகவே இருக்கும். (அஸ்ருத் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்குப் போய்ச்சேரும்போதும் சூரியன் (சாய்ந்துவிடாமல்) உயர்ந்தே இருக்கும்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அங்குப் போய்ச்சேரும்போதும்” எனும் சொற்கள் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment