அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1138

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ سِيرِينَ ‏ ‏قَالَ ‏ ‏تَلَقَّيْنَا ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏حِينَ قَدِمَ ‏ ‏الشَّامَ ‏ ‏فَتَلَقَّيْنَاهُ ‏ ‏بِعَيْنِ التَّمْرِ ‏ ‏فَرَأَيْتُهُ ‏ ‏يُصَلِّي عَلَى حِمَارٍ وَوَجْهُهُ ذَلِكَ الْجَانِبَ وَأَوْمَأَ ‏ ‏هَمَّامٌ ‏ ‏عَنْ يَسَارِ الْقِبْلَةِ فَقُلْتُ لَهُ رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ ‏

قَالَ ‏ ‏لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَفْعَلُهُ لَمْ أَفْعَلْهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) சிரியாவிலிருந்து திரும்பியபோது அவர்களை ‘அய்னுத் தம்ரு’ எனும் இடத்தில் நாங்கள் சந்தித்தவேளை, அவர்கள் கழுதையின் மீதமர்ந்தவாறு (கூடுதலான தொழுகைகள்) தொழுவதை நான் கண்டேன். அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) வேறு திசையில் இருந்தது. அப்போது நான், “நீங்கள் கிப்லா அல்லாத வேறு திசை நோக்கித் தொழுவதை நான் கண்டேனே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அனஸ் பின் ஸீரீன் (ரஹ்)

குறிப்பு :

அனஸ் (ரலி) தொழுத திசையை அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) கிப்லாவுக்கு இடப்பக்கம் என சைகை செய்து காட்டியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

Share this Hadith:

Leave a Comment