அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1138

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ سِيرِينَ ‏ ‏قَالَ :‏

‏ ‏تَلَقَّيْنَا ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏حِينَ قَدِمَ ‏ ‏الشَّامَ ‏ ‏فَتَلَقَّيْنَاهُ ‏ ‏بِعَيْنِ التَّمْرِ ‏ ‏فَرَأَيْتُهُ ‏ ‏يُصَلِّي عَلَى حِمَارٍ وَوَجْهُهُ ذَلِكَ الْجَانِبَ وَأَوْمَأَ ‏ ‏هَمَّامٌ ‏ ‏عَنْ يَسَارِ الْقِبْلَةِ فَقُلْتُ لَهُ رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ ‏قَالَ ‏ ‏لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَفْعَلُهُ لَمْ أَفْعَلْهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) சிரியாவிலிருந்து திரும்பியபோது அவர்களை ‘அய்னுத் தம்ரு’ எனும் இடத்தில் நாங்கள் சந்தித்தவேளை, அவர்கள் கழுதையின் மீதமர்ந்தவாறு (கூடுதலான தொழுகைகள்) தொழுவதை நான் கண்டேன். அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) வேறு திசையில் இருந்தது. அப்போது நான், “நீங்கள் கிப்லா அல்லாத வேறு திசை நோக்கித் தொழுவதை நான் கண்டேனே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அனஸ் பின் ஸீரீன் (ரஹ்)


குறிப்பு :

அனஸ் (ரலி) தொழுத திசையை அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) கிப்லாவுக்கு இடப்பக்கம் என சைகை செய்து காட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1137

‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏أَخْبَرَهُ ‏

أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏السُّبْحَةَ ‏ ‏بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُ تَوَجَّهَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் பயணம் செய்யும்போது தமது வாகனத்தின் முதுகிலமர்ந்தவாறு அது செல்லும் திசையில் நஃபில் தொழுகைகள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : ஆமிர் பின் ரபீஆ (ரலி) வழியாக அவரின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1136

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُسَبِّحُ ‏ ‏عَلَى ‏ ‏الرَّاحِلَةِ ‏ ‏قِبَلَ ‏ ‏أَيِّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لَا ‏ ‏يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் எந்தத் திசையை முன்னோக்கிப் பயணித்தாலும் அதில் இருந்தவாறு அவர்கள் நஃபில் தொழுகைகளைத் தொழுவார்கள். வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ளுத்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்.)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அவரின் மகன் ஸாலிம் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1135

و حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏‏

أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1134

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ ‏


قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ ‏ ‏كَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَفْعَلُ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தொழுவார்கள்” என்று (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1133

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَسَارٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏ 

‏كُنْتُ أَسِيرُ مَعَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِطَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ ثُمَّ أَدْرَكْتُهُ فَقَالَ لِي ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الْفَجْرَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسْوَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُوتِرُ عَلَى الْبَعِيرِ

நான் (ஓர் இரவில்) மக்கா செல்லும் சாலையில் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து நான் அஞ்சி, (எனது வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுதேன். பிறகு இப்னு உமர் (ரலி) அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டபோது, “(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து அஞ்சினேன். எனவே (வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுதேன்” என்று கூறினேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று இப்னு உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக (உள்ளது)!” என்றேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் யஸார் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1132

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ مُوَجِّهٌ إِلَى ‏ ‏خَيْبَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கழுதையில் (பயணித்தவாறு) தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1131

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي وَهُوَ مُقْبِلٌ مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ قَالَ وَفِيهِ نَزَلَتْ ‏‏فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُبَارَكٍ ‏ ‏وَابْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏ثُمَّ تَلَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ‏‏وَقَالَ فِي هَذَا نَزَلَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது பார்வை செல்லும் திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே, “… நீங்கள் எங்குத் திரும்பினாலும் அங்கிருப்பது அல்லாஹ்வின் திசையே!” எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இதை இப்னு உமர் (ரலி) அறிவித்த பிறகு ‘நீங்கள் எங்குத் திரும்பினாலும் அங்கிருப்பது அல்லாஹ்வின் திசையே!’ எனும் (2:115) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, இது தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1130

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُ تَوَجَّهَتْ بِهِ

நபி (ஸல்) தமது வாகனத்தில் அமர்ந்து, அது செல்லும் திசையை நோக்கி(நஃபிலான தொழுகைகளை)த் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1129

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي ‏ ‏سُبْحَتَهُ ‏ ‏حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ نَاقَتُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமது (ஒட்டகத்தின் மீதமர்ந்தவாறு) ஒட்டகம் செல்லும் திசையை நோக்கிக் கூடுதலான (நஃபில்) தொழுகை தொழுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)