அத்தியாயம்: 6, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1158

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏
‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏السُّدِّيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ

நபி (ஸல்) (தொழுது முடித்த பின்) தமது வலப்பக்கம் திரும்புவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1157

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏
‏عَنْ ‏ ‏السُّدِّيِّ ‏ ‏قَالَ ‏

سَأَلْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏كَيْفَ أَنْصَرِفُ إِذَا صَلَّيْتُ عَنْ يَمِينِي أَوْ عَنْ يَسَارِي قَالَ أَمَّا أَنَا فَأَكْثَرُ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “தொழுது முடித்ததும் நான் எப்பக்கம் திரும்ப வேண்டும்? என் வலப்பக்கத்திலா? இடப்பக்கத்திலா?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “என்னைப் பொருத்த வரை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுது முடித்தபின்) தமது வலப்பக்கம் திரும்புவதையே அதிகமாகக் கண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அஸ்ஸுத்தீ (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1156

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو
مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

لَا يَجْعَلَنَّ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ مِنْ نَفْسِهِ جُزْءًا لَا يَرَى إِلَّا أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لَا يَنْصَرِفَ إِلَّا عَنْ يَمِينِهِ أَكْثَرُ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْصَرِفُ عَنْ شِمَالِهِ ‏

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَعِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

வலப்பக்கம் திரும்பி அமர்வது (தொழுது முடித்தபின்) கடமை என்று எண்ணிக்கொண்டு, உங்களில் எவரும் ஷைத்தானுக்குத் தம்மிடம் இடமளித்துவிட வேண்டாம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) (தொழுது முடித்தபின் திரும்பி அமரும்போது) பெரும்பாலும் தமது இடப்பக்கம் திரும்புவதையே நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)