حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الْأَشْجَعِيُّ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ قَالَ فَنَفِدَتْ أَزْوَادُ الْقَوْمِ قَالَ حَتَّى هَمَّ بِنَحْرِ بَعْضِ حَمَائِلِهِمْ قَالَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ لَوْ جَمَعْتَ مَا بَقِيَ مِنْ أَزْوَادِ الْقَوْمِ فَدَعَوْتَ اللَّهَ عَلَيْهَا قَالَ فَفَعَلَ قَالَ فَجَاءَ ذُو الْبُرِّ بِبُرِّهِ وَذُو التَّمْرِ بِتَمْرِهِ قَالَ وَقَالَ مُجَاهِدٌ وَذُو النَّوَاةِ بِنَوَاهُ قُلْتُ وَمَا كَانُوا يَصْنَعُونَ بِالنَّوَى قَالَ كَانُوا يَمُصُّونَهُ وَيَشْرَبُونَ عَلَيْهِ الْمَاءَ قَالَ فَدَعَا عَلَيْهَا حَتَّى مَلَأَ الْقَوْمُ أَزْوِدَتَهُمْ قَالَ فَقَالَ عِنْدَ ذَلِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ لَا يَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ شَاكٍّ فِيهِمَا إِلَّا دَخَلَ الْجَنَّةَ
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, பயணக் கூட்டத்தாரின் ஒட்டகங்களில் சிலவற்றை அறுத்தால்தான் உணவு என்ற அளவுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
அப்போது உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்று திரட்டி, அதில் (பெருக்கம் ஏற்பட) நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தாலென்ன?” என்று வினவினார். “சரி, செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்தார்கள்.
அப்போது கோதுமை வைத்திருந்தவர், அவரது கோதுமையைக் கொண்டு வந்தார்; பேரிச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரிச்சம் பழங்களைக் கொண்டுவந்தார்” – முஜாஹித் (ரஹ்) அவர்கள், “பேரிச்சம்பழக் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கொண்டு வந்தார்” என்று (சேர்த்துக்) கூறினார். – “பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்தார்கள்?” என்று (தல்ஹா பின் முஸ்ர்ரிஃப் ஆகிய) நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை அருந்திக் கொள்வார்கள்.” என்று கூறினார்கள்.
(மக்களிடமிருந்து உணவுப்பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்கள் அனைவரும் தங்கள் பயண(த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொள்ளும் அளவுக்குப் பெருக்கம் ஏற்பட்டது. (இதைக்கண்ட) நபி (ஸல்), “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகின்றேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)