அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 9

حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ مَالِكٍ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ أَوْ دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقََ

மேற்கண்ட (எட்டாவது) ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

“அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் – அவர் அப்பராணை, வெற்றியடைந்து விட்டார்” என்றோ “அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் அவர் அப்பராணை, சுவனத்தில் நுழைந்து விட்டார்” என்றோ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அதில் இடம் பெற்றுள்ளது.


குறிப்பு: சில மொழிபெயர்ப்புகளில், “அவருடைய தந்தை மீது ஆணையாக!” என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிடப் படுகிறது. அக்கால அரபு மொழிப் பேச்சு வழக்கில், “அப்பராணை” என்ற சொல் சரளமாகப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது. “அப்பராணை” என்பது, சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாகச் சொல்வதற்கு அக்காலத்தில் ஆளப் பட்ட சொல்லேயன்றி ஆணையிடும் சொல்லன்று. தமிழிலும் இதுபோல் வழக்குச் சொல் உண்டு.

Share this Hadith:

Leave a Comment