அத்தியாயம்: 1, பாடம்: 1.22, ஹதீஸ் எண்: 81

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ ‏


و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏أَنْبَأَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٍ

“நீங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளாதவரைக்கும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தாதவரைக்கும் (முழுமையான) இறைநபிக்கையாளர் ஆக முடியாது. நீங்கள் நடைமுறைப்படுத்தினால் உங்களிடையே அன்பை உண்டாக்கும் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லித் தரவா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்பிக் கொள்வீர்களாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பு,  “எனது உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக, நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரைக்கும் சொர்க்கத்தில் நுழைய முடியாது …” என்று தொடங்குகின்றது.

Share this Hadith:

Leave a Comment