حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَرِيرٍ:
أَنَّهُ سَمِعَهُ يَقُولُ أَيُّمَا عَبْدٍ أَبَقَ مِنْ مَوَالِيهِ فَقَدْ كَفَرَ حَتَّى يَرْجِعَ إِلَيْهِمْ
قَالَ مَنْصُورٌ قَدْ وَاللَّهِ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنِّي أَكْرَهُ أَنْ يُرْوَى عَنِّي هَهُنَا بِالْبَصْرَةِ
“தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கின்றான்” என்று (நபியவர்கள் சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.
அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களது சொந்தக் கருத்தன்று. மாறாக,) நபி (ஸல்) கூறியது என்றே (எனக்கு) அறிவிக்கப்பட்டது. ஆயினும், (குழப்பவாதிகளான முஃதஸிலா மற்றும் காரிஜிய்யாக்கள் நிறைந்துள்ள) இந்த பஸ்ரா நகரில் எனது வழியாக இது அறிவிக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான மன்ஸூர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) கூறுகின்றார்.