அத்தியாயம்: 1, பாடம்: 32, ஹதீஸ் எண்: 107

و حَدَّثَنِي ‏ ‏عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ وَهُوَ ابْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو زُمَيْلٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏
‏قَالَ مُطِرَ النَّاسُ عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَصْبَحَ مِنْ النَّاسِ شَاكِرٌ وَمِنْهُمْ كَافِرٌ قَالُوا هَذِهِ رَحْمَةُ اللَّهِ وَقَالَ بَعْضُهُمْ لَقَدْ صَدَقَ نَوْءُ كَذَا وَكَذَا قَالَ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏
‏فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ ‏ ‏حَتَّى بَلَغَ ‏ ‏وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ‏

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தபோது நபி (ஸல்)அவர்கள், ”மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர்; நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, வானிலை மாற்றம் மெய்யாகி விட்டது என்று கூறுகின்றனர்” என்றார்கள்.

அப்போது தான் “நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்” என்று தொடங்கி, “ (இறைவன் வழங்கிய) உங்கள் வாழ்வாதாரத்திற்கு (நன்றியாக, என்னை நம்புவதில்) உங்களது மறுதலிப்பைக் காட்டுகிறீர்களோ?” என்று முடியும் இறைவசனங்கள் (56:75–82) அருளப் பெற்றன.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 32, ஹதீஸ் எண்: 106

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا أَنْزَلَ اللَّهُ مِنْ السَّمَاءِ مِنْ بَرَكَةٍ إِلَّا أَصْبَحَ فَرِيقٌ مِنْ النَّاسِ بِهَا كَافِرِينَ يُنْزِلُ اللَّهُ الْغَيْثَ فَيَقُولُونَ الْكَوْكَبُ كَذَا وَكَذَا ‏
‏وَفِي حَدِيثِ ‏ ‏الْمُرَادِيِّ ‏ ‏بِكَوْكَبِ كَذَا وَكَذَا ‏

“அல்லாஹ் வானத்திலிருந்து ஏதேனும் ஒரு வளத்தை இறக்கும் போதெல்லாம் மக்களில் ஒரு சாரார் அதன் விஷயத்தில் நன்றி கொன்றவர்களாய் மாறிவிடுகின்றனர். (வானிலிருந்து) அல்லாஹ் மழை பொழிவிக்கிறான். அவர்களோ, இன்ன இன்ன கிரக மாற்றம் (மழை பொழிவித்தது) என்று கூறுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு :

இதே ஹதீஸ் முஹம்மத் பின் ஸலமா அல் முராதீ (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “இன்ன இன்ன கிரகங்கள் (நகர்வின்) மூலம்தான்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 32, ஹதீஸ் எண்: 105

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏قَالَ ‏ ‏الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَلَمْ تَرَوْا إِلَى مَا قَالَ رَبُّكُمْ قَالَ ‏ ‏مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلَّا أَصْبَحَ فَرِيقٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ يَقُولُونَ الْكَوَاكِبُ وَبِالْكَوَاكِبِ ‏

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என மக்களிடம் கேட்டார்கள். பிறகு, “என் அடியார்களுக்கு நான் எனது அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் ஒரு சாரார் (இதற்கெல்லாம் காரணம்) கிரகங்கள்தாம்; கிரகங்களால்தான் (இது எங்களுக்குக் கிடைத்தது) என்று கூறி, அந்த அருட்செல்வத்தின் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாகி விடுகின்றனர் என்று அல்லாஹ் சொன்னான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 32, ஹதீஸ் எண்: 104

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ‏ ‏قَالَ ‏
‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الصُّبْحِ ‏ ‏بِالْحُدَيْبِيَةِ ‏ ‏فِي إِثْرِ السَّمَاءِ كَانَتْ مِنْ اللَّيْلِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ قَالَ ‏ ‏أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي مُؤْمِنٌ بِالْكَوْكَبِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது; வானில் அதன் அடையாளம் இன்னும் மிச்சமிருந்தது.

தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். “என் அடியார்களில் என்னை நம்பக் கூடியவரும் உள்ளனர்; (என்னை) மறுக்கக் கூடியவரும் உள்ளனர். ‘அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்கள் என்னை நம்பி, கிரகப் பயன்களை மறுத்தவர்களாவார்.

’இன்ன இன்ன வானிலை (கிரக) மாற்றங்களால்தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை மறுத்து கிரகப் பயன்களை நம்பியவர்கள் ஆவர்’ என அல்லாஹ் சொன்னான்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்-ஜுஹ்னீ (ரலி).