அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 113

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏زِرٍّ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏
‏وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَيَّ ‏ ‏أَنْ لَا يُحِبَّنِي إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضَنِي إِلَّا مُنَافِقٌ ‏

வித்துகளைப் பிளந்தவன் மீதாணை! உயிர்களைப் படைத்தவன் மீதாணை! “இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் (அலீ ஆகிய) என்னை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் என்னை வெறுக்கமாட்டார்கள்” என்று உம்மீ நபி (ஸல்) அவர்கள் என்னிடம் அறுதியிட்டுக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 112

و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يُبْغِضُ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏رَجُلٌ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ‏

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் அன்ஸாரிகளை வெறுக்க மாட்டார்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 111

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يُبْغِضُ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏رَجُلٌ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِر

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் அன்ஸாரிகளை வெறுக்க மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 110

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏مُعَاذُ بْنُ مُعَاذٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ ثَابِتٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏
‏يُحَدِّثُ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ فِي ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ ‏
‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَدِيٍّ ‏ ‏سَمِعْتَهُ مِنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ إِيَّايَ حَدَّثَ ‏

அன்ஸாரிகள் தொடர்பாக நபி (ஸல்)அவர்கள் கூறுகையில், “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்க மாட்டார்கள். அவர்களை நேசிப்பவரை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அவர்களை வெறுப்பவரை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அல்-பராஉ பின் ஆஸிப் (ரலி).

குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (இதை எனக்கு அறிவித்த) அதீ பின் ஸாபித் (ரஹ்) அவர்களிடம். “இதை அல்-பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்றீர்களா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ” (ஆம்!) எனக்கே அவர்கள் அறிவித்தார்கள்” என்று பதிலளித்தார்.

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 109

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏حُبُّ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏آيَةُ الْإِيمَانِ وَبُغْضُهُمْ آيَةُ النِّفَاقِ

“அன்ஸாரிகளை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளமாகும்; அவர்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்”

என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 108

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏آيَةُ الْمُنَافِقِ بُغْضُ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَآيَةُ الْمُؤْمِنِ حُبُّ ‏ ‏الْأَنْصَار

“நயவஞ்சகனின் அடையாளம் அன்ஸாரிகளை வெறுப்பதாகும்; இறைநம்பிக்கையாளரின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).