அத்தியாயம்: 1, பாடம்: 33, ஹதீஸ் எண்: 110

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏مُعَاذُ بْنُ مُعَاذٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ ثَابِتٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ:‏

‏يُحَدِّثُ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ فِي ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَدِيٍّ ‏ ‏سَمِعْتَهُ مِنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ إِيَّايَ حَدَّثَ ‏

அன்ஸாரிகளைப் பற்றி நபி (ஸல்) கூறுகையில், “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்க மாட்டார்கள். அவர்களை நேசிப்பவரை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அவர்களை வெறுப்பவரை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அல்-பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறினார்:

நான் (இதை எனக்கு அறிவித்த) அதீ பின் ஸாபித் (ரஹ்) அவர்களிடம். “இதை அல்-பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்றீர்களா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ” (ஆம்!) எனக்கே அவர்கள் அறிவித்தார்கள்” என்று பதிலளித்தார்.

Share this Hadith:

Leave a Comment