அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 118

و حَدَّثَنَا ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللَّهِ قَالَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ” (நற்)செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது” என்று கூறினார்கள். “பிறகு எது (சிறந்தது)?” என்று கேட்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள். “பிறகு எது (சிறந்தது)?” எனக் கேட்கப்பட்டபோது, ” (பாவசெயல் எதுவும் கலவாத) ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு :

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் (‘அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது’ எனும் இடத்தில்) “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment