அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 126

حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرِ بْنِ مُحَمَّدٍ النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلَاثًا الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَشَهَادَةُ الزُّورِ ‏ ‏أَوْ قَوْلُ الزُّورِ ‏ ‏وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَّكِئًا فَجَلَسَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ ‏

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “பெரும் பாவங்களுள் மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று (மூன்று முறை) கேட்டார்கள். பின்னர், சாய்ந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தமர்ந்து, “அவை, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோர் மனதைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் சொல்வது அல்லது பொய் பேசுவது” என்று திரும்பத் திரும்ப – அவர்கள் நிறுத்த மாட்டார்களா என்று நாங்கள் எண்ணுமளவுக்கு – கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment