அத்தியாயம்: 1, பாடம்: 43, ஹதீஸ் எண்: 147

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْعَلَاءُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ عَلَى ‏ ‏صُبْرَةِ ‏ ‏طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا ‏ ‏فَنَالَتْ ‏ ‏أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ ‏ ‏مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) உணவு(தானிய)க் குவியல் ஒன்றைக் கடந்து சென்றபோது, அந்தக் குவியலுக்குள் தமது கையை நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களது விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் (மழைச் சாரல் பட்டு) வானம் தீங்கிழைத்து விட்டது அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், “ஈரமான(தானியத்)தை மக்கள் பார்க்கும் விதமாக மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டு விட்டு, “மோசடி செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment