அத்தியாயம்: 1, பாடம்: 48, ஹதீஸ் எண்: 166

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْرِ بْنِ زَيْدٍ الدُّؤَلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي الْغَيْثِ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ مُطِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَهَذَا حَدِيثُهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْغَيْثِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏خَرَجْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَفَتَحَ اللَّهُ عَلَيْنَا فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا ‏ ‏وَرِقًا ‏ ‏غَنِمْنَا الْمَتَاعَ وَالطَّعَامَ وَالثِّيَابَ ثُمَّ انْطَلَقْنَا إِلَى الْوَادِي وَمَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَبْدٌ لَهُ وَهَبَهُ لَهُ رَجُلٌ مِنْ ‏ ‏جُذَامَ ‏ ‏يُدْعَى ‏ ‏رِفَاعَةَ بْنَ زَيْدٍ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي الضُّبَيْبِ ‏ ‏فَلَمَّا نَزَلْنَا الْوَادِي قَامَ عَبْدُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحُلُّ ‏ ‏رَحْلَهُ ‏ ‏فَرُمِيَ بِسَهْمٍ فَكَانَ فِيهِ ‏ ‏حَتْفُهُ ‏ ‏فَقُلْنَا هَنِيئًا لَهُ الشَّهَادَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَلَّا وَالَّذِي نَفْسُ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏بِيَدِهِ ‏ ‏إِنَّ ‏ ‏الشَّمْلَةَ ‏ ‏لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا أَخَذَهَا مِنْ الْغَنَائِمِ يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ قَالَ فَفَزِعَ النَّاسُ فَجَاءَ رَجُلٌ ‏ ‏بِشِرَاكٍ ‏ ‏أَوْ شِرَاكَيْنِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَصَبْتُ يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شِرَاكٌ ‏ ‏مِنْ نَارٍ ‏ ‏أَوْ شِرَاكَانِ ‏ ‏مِنْ نَارٍ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்குப்) புறப்பட்டோம்; அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின் போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாக அடையவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘வாதீ(அல்குரா)’ எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். ‘பனூ ளுபைப்’ குலத்தின் ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த (மித்அம் என்றழைக்கப்பட்ட) ஓர் அடிமையும் உடனிருந்தார்.

நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு வாழ்த்துகள்! இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்ததே” என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே (அனுமதியின்றி) அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

(இதை கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒருவர் ஒரு/இரு செருப்பு வாரைக் கொண்டு வந்து, “(இதை) நான் கைபர் போரின்போது (பங்கிடுமுன்) எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால்) “இவை, நரகத்தின் செருப்பு வார்/கள் (ஆகியிருக்கும்) என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment