அத்தியாயம்: 1, பாடம்: 55, ஹதீஸ் எண்: 177

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حَكِيمِ بْنِ حِزَامٍ ‏ ‏قَالَ ‏
‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَشْيَاءَ كُنْتُ أَفْعَلُهَا فِي الْجَاهِلِيَّةِ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏يَعْنِي ‏ ‏أَتَبَرَّرُ ‏ ‏بِهَا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏لَكَ مِنْ الْخَيْرِ قُلْتُ فَوَاللَّهِ لَا أَدَعُ شَيْئًا صَنَعْتُهُ فِي الْجَاهِلِيَّةِ إِلَّا فَعَلْتُ فِي الْإِسْلَامِ مِثْلَهُ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَعْتَقَ فِي الْجَاهِلِيَّةِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَعْتَقَ فِي الْإِسْلَامِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ ‏

“அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடி, பல நற்பணிகள் ஆற்றி வந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்கு நற்கூலி உண்டா?)” என்று கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள் (அவற்றுக்கு நற்கூலி உண்டு)” என்று பதிலளித்தார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்து வந்த நற்செயல் எதையும் இஸ்லாத்தி(ல் வந்த பிறகி)லும் செய்யாமல் விடமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர்: ஹகீம் பின் ஹிஸாம்(ரலி)

குறிப்பு:

“ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டங்களைத் தர்மம் செய்திருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களைத் தர்மம் செய்தார்கள்” என்று அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment