حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ مَخْلَدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي قَالَ فَلَا تُعْطِهِ مَالَكَ قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي قَالَ قَاتِلْهُ قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي قَالَ فَأَنْتَ شَهِيدٌ قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ قَالَ هُوَ فِي النَّارِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு ஒருவன் வந்தால் (நான் செய்ய வேண்டியது) என்னவெனக் கூறுங்கள்” என்று கேட்டார். “அவனுக்கு உமது செல்வத்தை(விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவன் என்னுடன் சண்டையிட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீயும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீ உயிர்தியாகி(ஷஹீத்) ஆகிவிடுவாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நான் அவனைக் கொன்று விட்டால்?” என்று அவர் கேட்டார். அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)