அத்தியாயம்: 1, பாடம்: 79, ஹதீஸ் எண்: 263

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏
‏قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ ‏ ‏إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ ‏ ‏الْقِسْطَ ‏ ‏وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ حِجَابُهُ النُّورُ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏النَّارُ ‏ ‏لَوْ كَشَفَهُ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏وَلَمْ يَقُلْ حَدَّثَنَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأَرْبَعِ كَلِمَاتٍ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ مِنْ خَلْقِهِ وَقَالَ حِجَابُهُ النُّورُ ‏

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது என்பது அவனுக்குத் தகாதது.

அவன் (மனித வாழ்வின்) துலாக்கோலைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

(மனிதர்கள்) இரவில் புரிந்த செயல்கள், (அவர்களது) பகல் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன.

(மனிதர்கள்) பகலில் புரிந்த செயல்கள், (அவர்களது) இரவுச் செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறன.

அவனது தடுப்புத்திரை என்பது ஒரு பேரொளியாகும். அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்” என்று ஐந்து விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்றவர்களாக எங்களுக்குச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘பேரொளி’ என்ற சொல்லுக்குக் பதிலாக ‘தீச்சுடர்’ என்ற சொல் அபூபக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் காணப் படுகிறது.

அல்-அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் எங்களிடம் சொன்னவை நான்கு விஷயங்களாகும்” என்றும் “ஒளியே அவனது திரையாகும்” என்றும் இடம் பெற்றுள்ளது. “அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment