அத்தியாயம்: 10, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1504

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏عُبَيْدَ بْنَ عُمَيْرٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏مَنْ أُصَدِّقُ حَسِبْتُهُ يُرِيدُ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ الشَّمْسَ انْكَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَامَ قِيَامًا شَدِيدًا يَقُومُ قَائِمًا ثُمَّ يَرْكَعُ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْكَعُ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْكَعُ رَكْعَتَيْنِ فِي ثَلَاثِ رَكَعَاتٍ وَأَرْبَعِ سَجَدَاتٍ فَانْصَرَفَ وَقَدْ تَجَلَّتْ الشَّمْسُ وَكَانَ إِذَا رَكَعَ قَالَ اللَّهُ أَكْبَرُ ثُمَّ يَرْكَعُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَكْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنَّهُمَا مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُ اللَّهُ بِهِمَا عِبَادَهُ فَإِذَا رَأَيْتُمْ كُسُوفًا فَاذْكُرُوا اللَّهَ حَتَّى يَنْجَلِيَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, அவர்கள் (தொழுகையில்) நீண்ட நேரம் (கால் கடுக்க) நின்றார்கள். நிலையில் நிற்பார்கள்; பிறகு ருகூஉச் செய்வார்கள்; மீண்டும் நிலையில் நிற்பார்கள்; பிறகு ருகூஉச் செய்வார்கள்; பிறகு நிலையில் நிற்பார்கள்; ருகூஉச் செய்வார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் மூன்று ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்யும்போது, “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தும்போது, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி எழுந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். (தொழுகை முடிந்த) பிறகு, “சூரியனும் சந்திரனும் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் காண்பதில்லை. மாறாக, அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும். அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்(தி நல்வழிப்படுத்)துகின்றான். கிரகணத்தை நீங்கள் கண்டால் (இருள் விலகி) வெளிச்சம் வரும்வரை அல்லாஹ்வை நினைவுகூருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உபைத் பின் உமைர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment