அத்தியாயம்: 10, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1518

حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْأَشْعَرِيُّ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏بُرَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

‏خَسَفَتْ الشَّمْسُ فِي زَمَنِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَامَ ‏ ‏فَزِعًا ‏ ‏يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ حَتَّى أَتَى الْمَسْجِدَ فَقَامَ ‏ ‏يُصَلِّي بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ مَا رَأَيْتُهُ يَفْعَلُهُ فِي صَلَاةٍ قَطُّ ثُمَّ قَالَ ‏ ‏إِنَّ هَذِهِ الْآيَاتِ الَّتِي يُرْسِلُ اللَّهُ لَا تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنَّ اللَّهَ يُرْسِلُهَا يُخَوِّفُ بِهَا عِبَادَهُ فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا ‏ ‏فَافْزَعُوا ‏ ‏إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ الْعَلَاءِ ‏ ‏كَسَفَتْ الشَّمْسُ وَقَالَ يُخَوِّفُ عِبَادَهُ

நபி (ஸல்) காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. யுக முடிவு நாள் வந்துவிட்டதோ என அஞ்சி(யதைப் போன்று) நபி (ஸல்) பதற்றமடைந்தவர்களாக எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அங்கு நின்று தொழுதார்கள். நிலை, குனிதல், சிரவணக்கம் ஆகியவற்றை நீண்ட நேரம் செய்(து தொழு)தார்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறு எந்தத் தொழுகையிலும் செய்ததை நான் கண்டதில்லை.

பிறகு, “அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும், அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கின்றான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் விரைந்து ஈடுபடுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி).

குறிப்பு : ‘சூரிய கிரகணம் ஏற்பட்டது’ என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் ‘ஃகசஃபத்திஷ் ஷம்ஸு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முஹம்மத் பின் அல்அலா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘கசஃபத்திஷ் ஷம்ஸு’ என்று ஆளப்பட்டுள்ளது. மேலும், ‚யுகவ்விஃபு பிஹா இபாதஹு’ என்பதில் ‘பிஹா’ எனும் சொல் முஹம்மத் பின் அல்அலா (ரஹ்) வழி அறிவிப்பில் விடுபட்டுள்ளது.

Share this Hadith:

Leave a Comment