அத்தியாயம்: 11, பாடம்: 17, ஹதீஸ் எண்: 1570

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏وَحَرْمَلَةَ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الْأَعْرَجُ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ ‏ ‏قِيرَاطٌ ‏ ‏وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ ‏ ‏قِيرَاطَانِ ‏ ‏قِيلَ وَمَا ‏ ‏الْقِيرَاطَانِ ‏ ‏قَالَ مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ ‏

‏انْتَهَى حَدِيثُ ‏ ‏أَبِي الطَّاهِرِ ‏ ‏وَزَادَ الْآخَرَانِ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏قَالَ ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يُصَلِّي عَلَيْهَا ثُمَّ يَنْصَرِفُ فَلَمَّا بَلَغَهُ حَدِيثُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ لَقَدْ ضَيَّعْنَا ‏ ‏قَرَارِيطَ ‏ ‏كَثِيرَةً ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى قَوْلِهِ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ وَلَمْ يَذْكُرَا مَا بَعْدَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَتَّى يُفْرَغَ مِنْهَا ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏حَتَّى تُوضَعَ فِي ‏ ‏اللَّحْدِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ حَدَّثَنِي ‏ ‏رِجَالٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏وَقَالَ وَمَنْ اتَّبَعَهَا حَتَّى تُدْفَنَ

“ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்பவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு ‘கீராத்’ நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது “இரண்டு ‘கீராத்’ என்றால் என்ன?” என வினவப்பட்டது. அதற்கு, “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்புகள் :

“(என் தந்தை) இப்னு உமர் (ரலி), ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்றுவிடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டியபோது, “நாம் ஏராளமான ‘கீராத்’ (நன்மை)களை வீணாக்கி (இழந்து)விட்டோம்’ என்று கூறினார்கள்” என்று வருந்தியதாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறினார்கள் என்பதாக இப்னு ஷிஹாப் (ரஹ்) அறிவித்தார்கள் என்று ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) ஆகியோரது வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர் தொடர்களில் “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்பதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பில் “அடக்கம் முடியும்வரை கலந்துகொள்பவருக்கு” என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில் “குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

அப்துல் மலிக் பின் ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு” என இடம்பெற்றுள்ளது. பிற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.