அத்தியாயம்: 11, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1605

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ابْنِ الدَّحْدَاحِ ‏ ‏ثُمَّ أُتِيَ بِفَرَسٍ ‏ ‏عُرْيٍ ‏ ‏فَعَقَلَهُ ‏ ‏رَجُلٌ فَرَكِبَهُ فَجَعَلَ ‏ ‏يَتَوَقَّصُ ‏ ‏بِهِ وَنَحْنُ نَتَّبِعُهُ ‏ ‏نَسْعَى خَلْفَهُ قَالَ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏كَمْ مِنْ ‏ ‏عِذْقٍ ‏ ‏مُعَلَّقٍ أَوْ مُدَلًّى فِي الْجَنَّةِ ‏ ‏لِابْنِ الدَّحْدَاحِ ‏

‏أَوْ قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏لِأَبِي الدَّحْدَاحِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்த பிறகு அவர்களிடம் சேணம் பூட்டப்படாத குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதை ஒரு மனிதர் பிடித்துக்கொள்ள அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏறிக்கொண்டார்கள். அது சீராக ஓடலாயிற்று. நாங்கள் அதைப் பின்தொடர்ந்து விரைந்து நடக்கலானோம். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவர், “இப்னுத் தஹ்தாஹ் (அல்லது அபுத்தஹ்தாஹ் என்பது ஷுஅபாவிடமிருந்து அறிவிப்பவரின் ஐயம்) அவர்களுக்காக சொர்க்கத்தில் எத்தனையோ பேரீச்சங்குலைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன என நபி (ஸல்) கூறினார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment