அத்தியாயம்: 11, பாடம்: 07, ஹதீஸ் எண்: 1533

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ يَعْنِي ابْنَ غَزِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْحَارِثِ بْنِ الْمُعَلَّى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَسَلَّمَ عَلَيْهِ ثُمَّ أَدْبَرَ الْأَنْصَارِيُّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا أَخَا ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏كَيْفَ أَخِي ‏ ‏سَعْدُ بْنُ عُبَادَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏صَالِحٌ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ يَعُودُهُ مِنْكُمْ فَقَامَ وَقُمْنَا مَعَهُ وَنَحْنُ بِضْعَةَ عَشَرَ مَا عَلَيْنَا نِعَالٌ وَلَا ‏ ‏خِفَافٌ ‏ ‏وَلَا ‏ ‏قَلَانِسُ ‏ ‏وَلَا قُمُصٌ نَمْشِي فِي تِلْكَ ‏ ‏السِّبَاخِ ‏ ‏حَتَّى جِئْنَاهُ فَاسْتَأْخَرَ قَوْمُهُ مِنْ حَوْلِهِ حَتَّى دَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ الَّذِينَ مَعَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு முறை நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து. ஸலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்ல முயன்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அன்ஸாரி சகோதரரே! என் சகோதரர் ஸஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?” என்று விசாரித்தார்கள். அதற்கு “நலமுடன் இருக்கிறார்” என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர் யார்?” என்று கேட்டவாறு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம். அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ அங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது ஸஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகி வழிவிடவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் வந்த தோழர்களும் ஸஅத் (ரலி) அவர்களிடம் நெருக்கமானார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

Share this Hadith:

Leave a Comment