அத்தியாயம்: 11, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1535

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتَى عَلَى امْرَأَةٍ تَبْكِي عَلَى صَبِيٍّ لَهَا فَقَالَ لَهَا ‏ ‏اتَّقِي اللَّهَ وَاصْبِرِي فَقَالَتْ وَمَا ‏ ‏تُبَالِي بِمُصِيبَتِي فَلَمَّا ذَهَبَ قِيلَ لَهَا إِنَّهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخَذَهَا مِثْلُ الْمَوْتِ فَأَتَتْ بَابَهُ فَلَمْ تَجِدْ عَلَى بَابِهِ بَوَّابِينَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَعْرِفْكَ فَقَالَ إِنَّمَا الصَّبْرُ عِنْدَ ‏ ‏أَوَّلِ صَدْمَةٍ ‏ ‏أَوْ قَالَ عِنْدَ أَوَّلِ الصَّدْمَةِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏عُثْمَانَ بْنِ عُمَرَ ‏ ‏بِقِصَّتِهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الصَّمَدِ ‏ ‏مَرَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒரு பெண்மணி அருகே சென்றார்கள். அந்தப் பெண், (இறந்துவிட்ட) தன் குழந்தை அருகே அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்),”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; பொறுமையாக இரு” என்று கூறினார்கள். அதற்கு அப்பெண், “என் துயரத்தை நீங்கள் அடையவில்லை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கிருந்து சென்றதும் அப்பெண்ணிடம் “அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்லப்பட்டது. அப்பெண்ணுக்கு மரணமே வந்துவிட்டதைப் போன்று வருத்தம் ஏற்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலில் வாயிற்காவலர் எவரும் இருக்கவில்லை. அப்பெண் “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

குறிப்பு : அப்துஸ் ஸமத் பின் அப்தில் வாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்கள் ஒரு கப்றின் அருகிலிருந்து (அழுது) கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து செல்லும்போது …” என ஹதீஸ் துவங்குகிறது.

Share this Hadith:

Leave a Comment