அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1547

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏ذُكِرَ عِنْدَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَرْفَعُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ فَقَالَتْ ‏ ‏وَهِلَ ‏ ‏إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّهُ لَيُعَذَّبُ بِخَطِيئَتِهِ ‏ ‏أَوْ بِذَنْبِهِ ‏ ‏وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ الْآنَ وَذَاكَ مِثْلُ قَوْلِهِ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَامَ عَلَى ‏ ‏الْقَلِيبِ ‏ ‏يَوْمَ ‏ ‏بَدْرٍ ‏ ‏وَفِيهِ قَتْلَى ‏ ‏بَدْرٍ ‏ ‏مِنْ الْمُشْرِكِينَ فَقَالَ لَهُمْ مَا قَالَ إِنَّهُمْ لَيَسْمَعُونَ مَا أَقُولُ وَقَدْ ‏ ‏وَهِلَ ‏ ‏إِنَّمَا قَالَ إِنَّهُمْ لَيَعْلَمُونَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌّ ثُمَّ قَرَأَتْ ‏”‏إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى” “‏وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ“ ‏ يَقُولُ حِينَ ‏ ‏تَبَوَّءُوا ‏ ‏مَقَاعِدَهُمْ مِنْ النَّارِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏وَحَدِيثُ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏أَتَمُّ

“இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்” என்று நபி (ஸல்) சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி), “இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அப்படிச் சொல்லவில்லை.) “இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகின்றார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்” என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று உமர் (ரலி) கேட்க, “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்ததாக இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார்.

“நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகின்றார்கள்” என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (“இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்” என்று சொல்லவில்லை).
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).
(நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22).
“நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) (விளக்கம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment