حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ
أَعْتَقَ رَجُلٌ مِنْ بَنِي عُذْرَةَ عَبْدًا لَهُ عَنْ دُبُرٍ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَلَكَ مَالٌ غَيْرُهُ فَقَالَ لَا فَقَالَ مَنْ يَشْتَرِيهِ مِنِّي فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَدَوِيُّ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ فَجَاءَ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَفَعَهَا إِلَيْهِ ثُمَّ قَالَ ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا فَإِنْ فَضَلَ شَيْءٌ فَلِأَهْلِكَ فَإِنْ فَضَلَ عَنْ أَهْلِكَ شَيْءٌ فَلِذِي قَرَابَتِكَ فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَيْءٌ فَهَكَذَا وَهَكَذَا يَقُولُ فَبَيْنَ يَدَيْكَ وَعَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ
و حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو مَذْكُورٍ أَعْتَقَ غُلَامًا لَهُ عَنْ دُبُرٍ يُقَالُ لَهُ يَعْقُوبُ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ اللَّيْثِ
‘பனூ உத்ரா’ குலத்தைச் சேர்ந்த ஒருவர், தாம் இறந்த பிறகு தம்முடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று அறிவித்திருந்தார். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), “அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உம்மிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (அந்த அடிமையைக் காட்டி), “இவரை என்னிடமிருந்து வாங்கிக்கொள்பவர் யார்?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்அதவீ (ரலி), அவ்வடிமையை எண்ணூறு வெள்ளிக் காசுகளுக்கு வாங்கிக்கொண்டார்கள். நுஐம் (ரலி) அந்தக் காசுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றைக் கொடுத்து, “உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக! பிறகு உமது தேவைபோக ஏதேனும் எஞ்சினால், அது உம்முடைய வீட்டாருக்கு உரியதாகும்! உன் வீட்டாருக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது உம் உறவினர்களுக்கு உரியதாகும். உம் உறவினர்களுக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக!)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி).
குறிப்பு : அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பு, “அன்ஸாரிகளில் ‘அபூமத்கூர்’ என்று சொல்லப்படும் ஒரு மனிதர் ‘யஅகூப்’ எனப்படும் தம் அடிமை, தமது இறப்புக்குப் பிறகு விடுதலை பெற்றவராவார் என (பின்விடுதலை) அறிவித்திருந்தார்” என்று தொடங்குகிறது.