و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ
فَرَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَةَ رَمَضَانَ عَلَى الْحُرِّ وَالْعَبْدِ وَالذَّكَرِ وَالْأُنْثَى صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ قَالَ فَعَدَلَ النَّاسُ بِهِ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ
சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு ‘ஸாஉ’ அல்லது பார்லியில் ஒரு ‘ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது) கடமையாகும் என ரமளான் தர்மத்தை நபி (ஸல்) நிர்ணயித்தார்கள். பிறகு மக்கள் கோதுமையில் அரை ‘ஸாஉ’வை அதற்குச் சமமாக ஆக்கினர்.
அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)