அத்தியாயம்: 12, பாடம்: 44, ஹதீஸ் எண்: 1748

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلْمَانَ بْنِ رَبِيعَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَسَمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَسْمًا فَقُلْتُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَغَيْرُ هَؤُلَاءِ كَانَ أَحَقَّ بِهِ مِنْهُمْ قَالَ ‏ ‏إِنَّهُمْ خَيَّرُونِي أَنْ يَسْأَلُونِي بِالْفُحْشِ أَوْ يُبَخِّلُونِي فَلَسْتُ بِبَاخِلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சிலருக்குத் தானப் பொருட்களை) பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே!, அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைவிட மிகவும் தகுதியுடைய பிறர் உள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவர்கள் அருவருப்பாகப் பேசியும் என்னைக் கஞ்சன் என்று சொல்லியும் என்னிடம் வந்து கேட்கின்றனர். ஆனால், நான் கஞ்சன் அல்லன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி)

Share this Hadith:

Leave a Comment