حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِعْرَانَةِ مُنْصَرَفَهُ مِنْ حُنَيْنٍ وَفِي ثَوْبِ بِلَالٍ فِضَّةٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبِضُ مِنْهَا يُعْطِي النَّاسَ فَقَالَ يَا مُحَمَّدُ اعْدِلْ قَالَ وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَكُنْ أَعْدِلُ لَقَدْ خِبْتَ وَخَسِرْتَ إِنْ لَمْ أَكُنْ أَعْدِلُ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ فَأَقْتُلَ هَذَا الْمُنَافِقَ فَقَالَ مَعَاذَ اللَّهِ أَنْ يَتَحَدَّثَ النَّاسُ أَنِّي أَقْتُلُ أَصْحَابِي إِنَّ هَذَا وَأَصْحَابَهُ يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنْهُ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنْ الرَّمِيَّةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنِي قُرَّةُ بْنُ خَالِدٍ حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْسِمُ مَغَانِمَ وَسَاقَ الْحَدِيثَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுனைன் போரை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஜிஅரானா’ எனுமிடத்தில் அவர்களிடம் ஒருவர் வந்தார். அப்போது பிலால் (ரலி) அவர்களது மடியில் வெள்ளி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை அள்ளி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த மனிதர், “முஹம்மதே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உமக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்து கொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் நான் நஷ்டமடைவேன்; இழப்பிற்கு உள்ளாவேன்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள், இந்த நயவஞ்சகனின் தலையைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு, “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் என் தோழர்களையே கொலை செய்கிறேன் என்று மக்கள் பேசுவார்கள். இவரும் இவருடைய தோழர்களும் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழியைத் தாண்டி (உள்ளத்திற்குள்) செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலில் தைத்து, (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு : அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள் …” என்று தொடங்குகிறது.