அத்தியாயம்: 12, பாடம்: 47, ஹதீஸ் எண்: 1764

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏وَعَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏أَنَّهُمَا أَتَيَا ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏فَسَأَلَاهُ عَنْ ‏ ‏الْحَرُورِيَّةِ ‏ ‏هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُهَا قَالَ لَا أَدْرِي مَنْ ‏ ‏الْحَرُورِيَّةُ ‏ ‏وَلَكِنِّي ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏يَخْرُجُ فِي هَذِهِ الْأُمَّةِ ‏ ‏وَلَمْ يَقُلْ مِنْهَا ‏ ‏قَوْمٌ ‏ ‏تَحْقِرُونَ ‏ ‏صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ فَيَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏حُلُوقَهُمْ ‏ ‏أَوْ حَنَاجِرَهُمْ ‏ ‏يَمْرُقُونَ ‏ ‏مِنْ الدِّينِ ‏ ‏مُرُوقَ ‏ ‏السَّهْمِ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏فَيَنْظُرُ الرَّامِي إِلَى سَهْمِهِ إِلَى ‏ ‏نَصْلِهِ ‏ ‏إِلَى ‏ ‏رِصَافِهِ ‏ ‏فَيَتَمَارَى فِي ‏ ‏الْفُوقَةِ ‏ ‏هَلْ عَلِقَ بِهَا مِنْ الدَّمِ شَيْءٌ

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் நாங்கள் இருவரும் சென்று ‘ஹரூரி(காரிஜி)ய்யா’க்கள் குறித்துக் கேட்டோம். ”அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதேனும் கூறியதை நீங்கள் செவியுற்றுள்ளீர்களா?” என்று வினவினோம்.

அதற்கு அபூஸயீத் (ரலி), “ஹரூரிய்யாக்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ‘இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியின் உடலை அம்பு (துளைத்து உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பெய்தவர் அம்பின் முனையையும், (அம்பில்) அதன் முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும் நாணையும் ஆராய்வார். (அவற்றில் இரத்த அடையாளம் எதையும் காணமாட்டார்.) அம்பின் முனையில் நாணைப் பொருத்தும் இடத்தில் இரத்தம் படிந்துள்ளதா என்றும் அவர் சந்தேகப்படுவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்பதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்கள் :அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் அதாஉ பின் யஸார் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment