و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ قَوْمًا يَكُونُونَ فِي أُمَّتِهِ يَخْرُجُونَ فِي فُرْقَةٍ مِنْ النَّاسِ سِيمَاهُمْ التَّحَالُقُ قَالَ هُمْ شَرُّ الْخَلْقِ أَوْ مِنْ أَشَرِّ الْخَلْقِ يَقْتُلُهُمْ أَدْنَى الطَّائِفَتَيْنِ إِلَى الْحَقِّ قَالَ فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُمْ مَثَلًا أَوْ قَالَ قَوْلًا الرَّجُلُ يَرْمِي الرَّمِيَّةَ أَوْ قَالَ الْغَرَضَ فَيَنْظُرُ فِي النَّصْلِ فَلَا يَرَى بَصِيرَةً وَيَنْظُرُ فِي النَّضِيِّ فَلَا يَرَى بَصِيرَةً وَيَنْظُرُ فِي الْفُوقِ فَلَا يَرَى بَصِيرَةً
قَالَ قَالَ أَبُو سَعِيدٍ وَأَنْتُمْ قَتَلْتُمُوهُمْ يَا أَهْلَ الْعِرَاقِ
நபி (ஸல்), தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில், “அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் வெளிப்படுவார்கள். அவர்களின் (பிரிவு) அடையாளம், தலைமுடியைச் சிரைத்துக் கொள்வதுதான். அவர்கள்தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள் அல்லது படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர். இரண்டு பிரிவினர்களுள் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள்” என்று கூறினார்கள். பிறகு அவர்களுக்கு உதாரணமாக ஒரு மனிதரைக் குறிப்பிட்டார்கள். “ஒருவர் வேட்டைப் பிராணியை நோக்கி அம்பை எய்வார். பிறகு அம்பின் முனையை ஆராய்வார். அதில் (பிராணியின் உடலைத் துளைத்த) எந்த அடையாளத்தையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் அடிப் பாகக் குச்சியைப் பார்பபார். அதிலும் (பிராணியை வீழ்த்திவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் முனையில் நாணைப் பொருத்தப் பயன்படும் இடத்தைப் பார்ப்பார். அதிலும் (பிராணியைத் தாக்கியதற்கான) எந்தச் சான்றையும் அவர் காண மாட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
குறிப்பு : “இராக்வாசிகளே! நீங்கள்தாம் அவர்களைக் கொன்றொழித்தீர்கள்” என்று அபூஸயீத் (ரலி) கூறினார்கள்.