அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1909

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏:‏

‏أَنَّهُ سَمِعَ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏خَطِيبًا ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏يَعْنِي فِي قَدْمَةٍ قَدِمَهَا خَطَبَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ لِهَذَا الْيَوْمِ ‏ ‏هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبْ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَمَنْ أَحَبَّ أَنْ يُفْطِرَ فَلْيُفْطِرْ ‏


حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فِي مِثْلِ هَذَا الْيَوْمِ ‏ ‏إِنِّي صَائِمٌ فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَلَمْ يَذْكُرْ بَاقِي حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَيُونُسَ

முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) ஒரு முறை (ஸிரியாவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது, ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது “மதீனாவாசிகளே!, உங்கள் அறிஞர்கள் எங்கே?”
“இது, ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளாகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸுஃப்யான் (ரலி) வழியாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)


குறிப்பு :

மாலிக் பின் அனஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இது போன்ற (ஆஷூரா) நாளில் நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் காணப்படவில்லை.

Share this Hadith:

Leave a Comment