அத்தியாயம்: 13, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1796

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَكَرَ رَمَضَانَ فَضَرَبَ بِيَدَيْهِ فَقَالَ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ثُمَّ عَقَدَ إِبْهَامَهُ فِي الثَّالِثَةِ ‏ ‏فَصُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ثَلَاثِينَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَإِنْ ‏ ‏غُمَّ ‏ ‏عَلَيْكُمْ فَاقْدِرُوا ثَلَاثِينَ نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَضَانَ فَقَالَ ‏ ‏الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا وَقَالَ فَاقْدِرُوا لَهُ وَلَمْ يَقُلْ ثَلَاثِينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் பற்றிக் கூறும்போது, “மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்” என்று தம்மிரு கைகளையும் (மூன்று தடவை) காட்டிக், கூறினார்கள். மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள். மேலும் “பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்தே நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானை) மேகம் மூடினால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆக நிறைவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்புகள் : உபைதுல்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களுக்கு (வானை) மேகம் மூடினால், (அந்த மாதத்தின் நாட்களை) முப்பதாக நிறைவாக்கிக்கொள்ளுங்கள்“ என்று இடம்பெற்றுள்ளது.

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதம் குறித்துக் கூறும்போது, “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்; மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்”’ என்று கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில், “(மேகம் மூடினால்,) அந்த மாதத்தை நிறைவாக்கிக்கொள்ளுங்கள்” என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘முப்பதாக’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment