அத்தியாயம்: 13, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1915

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعُ بْنُ الْجَرَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏حَاجِبِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ ‏ ‏قَالَ ‏ ‏انْتَهَيْتُ إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي ‏ ‏زَمْزَمَ ‏ ‏فَقُلْتُ لَهُ ‏

‏أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ ‏ ‏إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُهُ قَالَ نَعَمْ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ عَمْرٍو ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ عِنْدَ ‏ ‏زَمْزَمَ ‏ ‏عَنْ صَوْمِ عَاشُورَاءَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏حَاجِبِ بْنِ عُمَرَ

இப்னு அப்பாஸ் (ரலி) ஸம்ஸம் கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். “ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையைக் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, “ஆம்’ என்று அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்)

குறிப்பு : முஆவியா பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பு, “ஸம்ஸம் கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக்கிச் சாய்ந்திருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்டேன்” எனத் தொடங்குகிறது.

Share this Hadith:

Leave a Comment