அத்தியாயம்: 13, பாடம்: 23, ஹதீஸ் எண்: 1927

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَابِقٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَهُ ‏ ‏وَأَوْسَ بْنَ الْحَدَثَانِ ‏ ‏أَيَّامَ التَّشْرِيقِ ‏ ‏فَنَادَى أَنَّهُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ وَأَيَّامُ ‏ ‏مِنًى ‏ ‏أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَنَادَيَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னையும் அவ்ஸு பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அனுப்பி, “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; மினா’வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் மாலிக் (ரலி)

குறிப்பு : அப்துல் மாலிக் பின் அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment