و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ جَمِيعًا عَنْ ابْنِ مَهْدِيٍّ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو بَلَغَنِي أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَلَا تَفْعَلْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَظًّا وَلِعَيْنِكَ عَلَيْكَ حَظًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَظًّا صُمْ وَأَفْطِرْ صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بِي قُوَّةً قَالَ فَصُمْ صَوْمَ دَاوُدَ عَلَيْهِ السَّلَام صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا فَكَانَ يَقُولُ يَا لَيْتَنِي أَخَذْتُ بِالرُّخْصَةِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அம்ரின் மகன் அப்துல்லாஹ்வே! நீ பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குச் செய்தி எட்டியது. அவ்வாறு நீ செய்யாதே. ஏனெனில், உனது உடலுக்கு அளிக்க வேண்டிய பங்கு உனக்கு உண்டு. உனது கண்ணுக்கு வழங்க வேண்டிய பங்கும் உனக்கு உண்டு. உன் துணைவிக்கு வழங்க வேண்டிய பங்கும் உனக்கு உண்டு. (சில நாட்கள்) நோன்பு நோற்று, (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடு! ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் நோற்பாயாக! இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்தி உள்ளது (என்னால் அதைவிட அதிகமான நோன்புகள் நோற்க முடியும்)” என்றேன். அவர்கள், “அப்படியானால் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போன்று நோன்பு நோற்பாயாக; ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவாயாக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
குறிப்பு : இதன் அறிவிப்பாளரான ஸயீத் பின் மீனாஉ (ரஹ்), “அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) (முதுமையடைந்த) பின்னர் ‘(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்களித்த) அந்தச் சலுகையைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்று கூறுவார்கள்” என்று குறிப்பிடுகின்றார்.