அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1996

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏اعْتَكَفَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ قَبْلَ أَنْ ‏ ‏تُبَانَ ‏ ‏لَهُ فَلَمَّا انْقَضَيْنَ أَمَرَ بِالْبِنَاءِ ‏ ‏فَقُوِّضَ ‏ ‏ثُمَّ أُبِينَتْ لَهُ أَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَأَمَرَ بِالْبِنَاءِ فَأُعِيدَ ثُمَّ خَرَجَ عَلَى النَّاسِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّهَا كَانَتْ ‏ ‏أُبِينَتْ لِي لَيْلَةُ الْقَدْرِ وَإِنِّي خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِهَا فَجَاءَ رَجُلَانِ يَحْتَقَّانِ مَعَهُمَا الشَّيْطَانُ فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ الْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ قَالَ قُلْتُ يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏إِنَّكُمْ أَعْلَمُ بِالْعَدَدِ مِنَّا قَالَ أَجَلْ نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْكُمْ قَالَ قُلْتُ مَا التَّاسِعَةُ وَالسَّابِعَةُ وَالْخَامِسَةُ قَالَ إِذَا مَضَتْ وَاحِدَةٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا ثِنْتَيْنِ وَعِشْرِينَ وَهِيَ التَّاسِعَةُ فَإِذَا مَضَتْ ثَلَاثٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا السَّابِعَةُ فَإِذَا مَضَى خَمْسٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا الْخَامِسَةُ ‏

‏و قَالَ ‏ ‏ابْنُ خَلَّادٍ ‏ ‏مَكَانَ يَحْتَقَّانِ يَخْتَصِمَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்கு லைலத்துல் கத்ரு இரவு பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் ரமளான் மாதத்தின் நடுப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை அடைவதற்கு இஃதிகாஃப் இருந்தார்கள். நடுப் பத்து நாட்கள் முடிந்ததும் (தம்) கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட, அவ்வாறே அது அகற்றப்பட்டது. பின்னர் லைலத்துல் கத்ரு இரவு இறுதிப் பத்து இரவுகளில் இருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். மீண்டும் கூடாரம் அமைக்கப்பட்ட பிறகு மக்களிடம் புறப்பட்டு வந்து, “மக்களே! லைலத்துல் கத்ரு பற்றிய குறிப்பு எனக்கு அறிவிக்கப்பட்டது. அதைப் பற்றிச் சொல்வதற்காக உங்களிடம் நான் புறப்பட்டு வந்தேன். அப்போது இருவர் தமது உரிமை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தானும் இருந்தான். அதனால் அதை(ப் பற்றிய குறிப்பை) நான் மறக்கடிக்கப்பட்டேன். ஆகவே, ரமளானின் இறுதிப் பத்தில் அந்த இரவை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். (மிச்சமிருக்கும்) ஒன்பது, ஏழு, ஐந்து ஆகிய இரவுகளில் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

குறிப்பு : நான் அபூஸயீத் (ரலி) அவர்களிடம் “இரவுகளின் எண்ணிக்கை பற்றி எங்களைவிட நீங்களே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கு அவர்கள், “ஆம். உங்களைவிட நாங்களே அதற்குத் தகுதியானவர்கள்” என்றார்கள். நான், “ஒன்பது, ஏழு, ஐந்து என்பவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இருபத்தொன்றாவது இரவை அடுத்து வரும் இருபத்து இரண்டாவது இரவே (30-21=9) ‘ஒன்பது’ என்பதாகும். இருபத்து மூன்றாவது இரவை அடுத்து வரும் இரவே (30-23=7) ‘ஏழு’ என்பதாகும். இருபத்து ஐந்தாவது இரவை அடுத்து வரும் இரவே (30-25=5) ‘ஐந்து’ என்பதாகும்” என்று விடையளித்தார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூநள்ரா (ரஹ்) கூறுகின்றார்.

அபூபக்ரு பின் கல்லாத் (ரஹ்) வழி அறிவிப்பில், (‘இருவர் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்’ என்பதற்குப் பகரமாக) ‘சச்சரவு செய்துகொண்டிருந்தனர்’ என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment