و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغُرَّنَّكُمْ مِنْ سَحُورِكُمْ أَذَانُ بِلَالٍ وَلَا بَيَاضُ الْأُفُقِ الْمُسْتَطِيلُ هَكَذَا حَتَّى يَسْتَطِيرَ هَكَذَا
وَحَكَاهُ حَمَّادٌ بِيَدَيْهِ قَالَ يَعْنِي مُعْتَرِضًا
“உங்களை ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம். அடிவானில் நீள வாக்கில் (செங்குத்தாய்) தெரியும் விடியல் வெண்மை – இவ்வாறு (அகலவாக்கில்) பரவும் வரை – ஏமாற்றி(தடுத்து)விட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
குறிப்பு :
இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அ(கலவாக்கில் பரவலாகத் தெரியும்வரை என்ப)தை அறிவிக்கும்போது, தம் இரு கரங்களால் சைகை செய்து ”இவ்வாறு” என்று (விரித்துக்) காட்டினார்கள்.