அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2021

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَلِيٍّ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏صَفْوَانُ بْنُ يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏بِهَا أَثَرٌ مِنْ ‏ ‏خَلُوقٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ فَكَيْفَ أَفْعَلُ فَسَكَتَ عَنْهُ فَلَمْ يَرْجِعْ إِلَيْهِ وَكَانَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَسْتُرُهُ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ يُظِلُّهُ فَقُلْتُ ‏ ‏لِعُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏إِنِّي أُحِبُّ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ أَنْ أُدْخِلَ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَلَمَّا أُنْزِلَ عَلَيْهِ ‏ ‏خَمَّرَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِالثَّوْبِ فَجِئْتُهُ فَأَدْخَلْتُ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ فَلَمَّا ‏ ‏سُرِّيَ ‏ ‏عَنْهُ قَالَ أَيْنَ السَّائِلُ آنِفًا عَنْ الْعُمْرَةِ فَقَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ ‏ ‏انْزِعْ عَنْكَ جُبَّتَكَ وَاغْسِلْ أَثَرَ ‏ ‏الْخَلُوقِ ‏ ‏الَّذِي بِكَ وَافْعَلْ فِي عُمْرَتِكَ مَا كُنْتَ فَاعِلًا فِي حَجِّكَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, மேலங்கி அணிந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவரது அங்கியில் நறுமணத்தின் அடையாளம் இருந்தது. அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டுவிட்டேன். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்), பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ, பலருக்கு மத்தியில்) அருளப் பெறும்போது, (துணி போன்றவற்றால்) அவர்களது தலைக்கு மேல் நிழலிட்டு அவர்களை உமர் (ரலி) மறைப்பார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெறும்போது அவர்கள்மீது இடப்படும் துணிக்குள் நான் எனது தலையை நுழை(த்துப் பார்)க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்” என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்றது, உமர் (ரலி) துணியால் அவர்களை மறைத்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அந்தத் துணிக்குள் எனது தலையை நுழைத்து, அவர்களைக் கூர்ந்து நோக்கினேன். நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீயின்போது ஏற்படும் சிரம நிலை அவர்களைவிட்டு) விலகியபோது, “சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள்.

உடனே அவர்களிடம் அந்த மனிதர் (வந்து) நின்றார். அப்போது நபி (ஸல்), “உமது அங்கியைக் களைந்து கொள்க; உம்மீதுள்ள நறுமணத்தின் அடையாளத்தைக் கழுவிக் கொள்க. நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2020

و حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَيْسًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْجِعْرَانَةِ ‏ ‏قَدْ ‏ ‏أَهَلَّ بِالْعُمْرَةِ ‏ ‏وَهُوَ مُصَفِّرٌ لِحْيَتَهُ وَرَأْسَهُ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ وَأَنَا كَمَا ‏ ‏تَرَى فَقَالَ ‏ ‏انْزِعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ عَنْكَ الصُّفْرَةَ وَمَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ

நபி (ஸல்) ’ஜிஅரானா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, உம்ராவிற்காக இஹ்ராம் பூண்ட ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர் தமது தாடியிலும் தலையிலும் மஞ்சள் நிற நறுமணம் பூசியிருந்தார்; (தைக்கப்பட்ட) அங்கி அணிந்திருந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் காணும் இந்த நிலையில் நான் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டிருக்கின்றேன்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்), “நீர் உமது அங்கியைக் களைந்து கொள்க; மஞ்சள் நிற நறுமணத்தைக் கழுவிக் கொள்க; உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2019

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّ ‏ ‏صَفْوَانَ بْنَ يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏أَخْبَرَهُ ‏

‏أَنَّ ‏ ‏يَعْلَى ‏ ‏كَانَ يَقُولُ ‏ ‏لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏لَيْتَنِي أَرَى نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ يُنْزَلُ عَلَيْهِ فَلَمَّا كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْجِعْرَانَةِ ‏ ‏وَعَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ عَلَيْهِ مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ ‏ ‏عُمَرُ ‏ ‏إِذْ جَاءَهُ رَجُلٌ عَلَيْهِ ‏ ‏جُبَّةُ ‏ ‏صُوفٍ ‏ ‏مُتَضَمِّخٌ ‏ ‏بِطِيبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ ‏ ‏تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ فِي ‏ ‏جُبَّةٍ ‏ ‏بَعْدَ مَا ‏ ‏تَضَمَّخَ ‏ ‏بِطِيبٍ فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَاعَةً ثُمَّ سَكَتَ فَجَاءَهُ الْوَحْيُ فَأَشَارَ ‏ ‏عُمَرُ ‏ ‏بِيَدِهِ إِلَى ‏ ‏يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏تَعَالَ فَجَاءَ ‏ ‏يَعْلَى ‏ ‏فَأَدْخَلَ رَأْسَهُ فَإِذَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُحْمَرُّ الْوَجْهِ ‏ ‏يَغِطُّ ‏ ‏سَاعَةً ثُمَّ ‏ ‏سُرِّيَ ‏ ‏عَنْهُ فَقَالَ أَيْنَ الَّذِي سَأَلَنِي عَنْ الْعُمْرَةِ آنِفًا فَالْتُمِسَ الرَّجُلُ فَجِيءَ بِهِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ وَأَمَّا ‏ ‏الْجُبَّةُ ‏ ‏فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ

யஅலா பின் உமய்யா (ரலி), உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என ஆசையாக உள்ளது)” என்று கூறுவார்கள்.

நபி (ஸல்) (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் (ஒரு முறை) தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மேலே துணியொன்று நிழலுக்காகக் கட்டப் பட்டிருந்தது. அவர்களுடன் உமர் (ரலி) உள்ளிட்ட அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர்.

அப்போது அதிகமாக நறுமணம் பூசிய, கம்பளியாலான அங்கியணிந்த ஒருவர் வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக நறுமணம் பூசப்பட்ட அங்கியால் இஹ்ராம் பூண்டவர் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

அவரை நபி (ஸல்) சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெற்றது. உடனே உமர் (ரலி), ‘இங்கு வாருங்கள்’ என சைகையால் என்னை அழைத்தார்கள்.

நான் (யஅலா) சென்று (நபி (ஸல்) அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த துணிக்குள்) எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில், குறட்டை விட்டபடி சிறிது நேரம் காணப் பெற்றார்கள். பிறகு அவர்களைவிட்டு அந்த நிலை விலகியது. அப்போது நபி (ஸல்), “சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். அவர் தேடப்பட்டு, அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் நபி (ஸல்), “உம்மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவிக்கொள்க. (தைக்கப்பட்டுள்ள உமது) அங்கியைக் களைந்து விடுக. (தைக்கப்படாத ஆடை அணிந்து கொள்க.) பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி) வழியாக அவருடைய மகன் ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2018

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلٌ وَهُوَ ‏ ‏بِالْجِعْرَانَةِ ‏ ‏وَأَنَا عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَلَيْهِ ‏ ‏مُقَطَّعَاتٌ ‏ ‏يَعْنِي جُبَّةً وَهُوَ ‏ ‏مُتَضَمِّخٌ ‏ ‏بِالْخَلُوقِ ‏ ‏فَقَالَ إِنِّي أَحْرَمْتُ بِالْعُمْرَةِ وَعَلَيَّ هَذَا وَأَنَا ‏ ‏مُتَضَمِّخٌ ‏ ‏بِالْخَلُوقِ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ قَالَ أَنْزِعُ عَنِّي هَذِهِ الثِّيَابَ وَأَغْسِلُ عَنِّي هَذَا ‏ ‏الْخَلُوقَ ‏ ‏فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ

நபி (ஸல்) ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் இருந்தபோது, அதிகமாக நறுமணம் பூசப்பட்ட, தைக்கப்பட்ட அங்கி அணிந்த ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர், “இந்த அங்கி என் மீதிருக்கும் நிலையிலும், அதிகமாக நறுமணம் பூசியிருக்கும் நிலையிலும் நான் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டுவிட்டேன்” என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்), “உமது ஹஜ்ஜில் நீர் என்ன செய்வீர்?” என்று கேட்டார்கள். அவர், “இந்த அங்கியைக் களைந்து விடுவேன்; என் மீதுள்ள இந்த நறுமணத்தைக் கழுவிக் கொள்வேன்” என்றார். நபி (ஸல்), “உமது ஹஜ்ஜில் நீர் செய்வதை உம்ராவிலும் செய்துகொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2017

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْجِعْرَانَةِ ‏ ‏عَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏وَعَلَيْهَا ‏ ‏خَلُوقٌ ‏ ‏أَوْ قَالَ أَثَرُ صُفْرَةٍ ‏ ‏فَقَالَ كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي قَالَ وَأُنْزِلَ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْوَحْيُ فَسُتِرَ بِثَوْبٍ وَكَانَ ‏ ‏يَعْلَى ‏ ‏يَقُولُ وَدِدْتُ أَنِّي أَرَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدْ نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ قَالَ فَقَالَ أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ قَالَ فَرَفَعَ ‏ ‏عُمَرُ ‏ ‏طَرَفَ الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ ‏ ‏غَطِيطٌ ‏ ‏قَالَ وَأَحْسَبُهُ قَالَ كَغَطِيطِ ‏ ‏الْبَكْرِ ‏ ‏قَالَ فَلَمَّا ‏ ‏سُرِّيَ ‏ ‏عَنْهُ قَالَ ‏ ‏أَيْنَ السَّائِلُ عَنْ الْعُمْرَةِ اغْسِلْ عَنْكَ أَثَرَ الصُّفْرَةِ ‏ ‏أَوْ قَالَ أَثَرَ ‏ ‏الْخَلُوقِ ‏ ‏وَاخْلَعْ عَنْكَ جُبَّتَكَ وَاصْنَعْ فِي عُمْرَتِكَ مَا أَنْتَ صَانِعٌ فِي حَجِّكَ

நபி (ஸல்) (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் இருந்தபோது, அவர்களிடம் நறுமணம் (அல்லது மஞ்சள் நிற அடையாளம்) பூசப்பட்ட மேலங்கி அணிந்த ஒருவர் வந்தார்.

அவர், “நான் எனது உம்ராவில் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வந்தது. உடனே அவர்கள் ஒரு துணியால் மறைக்கப் பட்டார்கள். “நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க நீர் விரும்புகிறீரா?” என உமர் (ரலி) என்னிடம் (நினைவூட்டிக்) கேட்டார்கள். (ஏனெனில்,)“நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியிருந்தேன்.

எனவே, உமர் (ரலி) (நபியவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை விலக்கினார்கள். நபி (ஸல்) இளம் ஒட்டகம் குறட்டை விடுவதைப் போன்று குறட்டை விட்டுக் கொண்டிருந்ததை அப்போது நான் கண்டேன்.

பிறகு (அந்த நிலை) அவர்களை விட்டு விலகியபோது, “என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். (அந்த மனிதர் வந்ததும்), “உம்மீதுள்ள மஞ்சள் நிற அடையாளத்தை அல்லது நறுமணத்தின் அடையாளத்தை கழுவிக் கொள்க. உமது அங்கியை களைந்து கொள்க. மேலும், நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி) வழியாக அவருடைய மகன் ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2016

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ وَمَنْ لَمْ يَجِدْ ‏ ‏إِزَارًا ‏ ‏فَلْيَلْبَسْ سَرَاوِيلَ

“காலணிகள் கிடைக்காதவர் (இஹ்ராமின்போது) காலுறைகளை அணியட்டும்; கீழாடை கிடைக்காதவர் முழுக் கால்சட்டை அணியட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2015

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَخْطُبُ يَقُولُ ‏ ‏السَّرَاوِيلُ لِمَنْ لَمْ يَجِدْ الْإِزَارَ وَالْخُفَّانِ لِمَنْ لَمْ يَجِدْ النَّعْلَيْنِ ‏ ‏يَعْنِي الْمُحْرِمَ ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ ‏ ‏بِعَرَفَاتٍ ‏ ‏فَذَكَرَ هَذَا الْحَدِيثَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ يَخْطُبُ ‏ ‏بِعَرَفَاتٍ ‏ ‏غَيْرُ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَحْدَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரையாற்றும்போது, “கீழாடை கிடைக்காத முஹ்ரிம்,-முழுக்கால் சட்டை அணிவார்; காலணிகள் கிடைக்காத முஹ்ரிம் காலுறைகள் அணிவார்” என்று குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் மட்டும், “நபி (ஸல்) அரஃபாவில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2014

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَلْبَسَ الْمُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ أَوْ ‏ ‏وَرْسٍ ‏ ‏وَقَالَ ‏ ‏مَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ ‏ ‏الْكَعْبَيْنِ

“இஹ்ராம் பூண்டவர், குங்குமப் பூ மற்றும் வர்ஸ் ஆகிய வாசனைச் செடிகளின் சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.

மேலும், “காலணிகள் கிடைக்காதவர், காலுறைகள் அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்துக் கொள்ளட்டும்” என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2013

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَلْبَسُ الْمُحْرِمُ قَالَ ‏ ‏لَا يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ وَلَا الْعِمَامَةَ وَلَا ‏ ‏الْبُرْنُسَ ‏ ‏وَلَا السَّرَاوِيلَ وَلَا ثَوْبًا مَسَّهُ ‏ ‏وَرْسٌ ‏ ‏وَلَا زَعْفَرَانٌ وَلَا الْخُفَّيْنِ إِلَّا أَنْ لَا يَجِدَ نَعْلَيْنِ فَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنْ ‏ ‏الْكَعْبَيْنِ

நபி (ஸல்) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “சட்டை, தலைப்பாகை, மேலங்கி, கால்சட்டை, வர்ஸ் மற்றும் குங்குமப்பூ ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை, காலுறைகள் ஆகியவற்றை இஹ்ராம் பூண்டவர் அணிய வேண்டாம். காலணிகள் கிடைக்காவிட்டால், காலுறைகள் அணியலாம். ஆனால், கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி காலுறைகளைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2012

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنْ الثِّيَابِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَلْبَسُوا الْقُمُصَ وَلَا الْعَمَائِمَ وَلَا السَّرَاوِيلَاتِ وَلَا ‏ ‏الْبَرَانِسَ ‏ ‏وَلَا ‏ ‏الْخِفَافَ ‏ ‏إِلَّا أَحَدٌ لَا يَجِدُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ ‏ ‏الْكَعْبَيْنِ ‏ ‏وَلَا تَلْبَسُوا مِنْ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلَا ‏ ‏الْوَرْسُ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஹ்ரிம் ஆன ஒருவர், எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சட்டைகள், தலைப்பாகைகள், கால்சட்டைகள், மேலங்கிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூ மற்றும் வர்ஸ் ஆகிய வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட எந்த ஆடையையும் அணியாதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)


குறிப்பு : ‘முஹ்ரிம்‘ எனப்படுபவர், ஹஜ் அல்லது உம்ராவுக்கான நிய்யத்துடன் இஹ்ராம் பூண்டவராவார்.