அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2021

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَلِيٍّ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏صَفْوَانُ بْنُ يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏بِهَا أَثَرٌ مِنْ ‏ ‏خَلُوقٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ فَكَيْفَ أَفْعَلُ فَسَكَتَ عَنْهُ فَلَمْ يَرْجِعْ إِلَيْهِ وَكَانَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَسْتُرُهُ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ يُظِلُّهُ فَقُلْتُ ‏ ‏لِعُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏إِنِّي أُحِبُّ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ أَنْ أُدْخِلَ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَلَمَّا أُنْزِلَ عَلَيْهِ ‏ ‏خَمَّرَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِالثَّوْبِ فَجِئْتُهُ فَأَدْخَلْتُ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ فَلَمَّا ‏ ‏سُرِّيَ ‏ ‏عَنْهُ قَالَ أَيْنَ السَّائِلُ آنِفًا عَنْ الْعُمْرَةِ فَقَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ ‏ ‏انْزِعْ عَنْكَ جُبَّتَكَ وَاغْسِلْ أَثَرَ ‏ ‏الْخَلُوقِ ‏ ‏الَّذِي بِكَ وَافْعَلْ فِي عُمْرَتِكَ مَا كُنْتَ فَاعِلًا فِي حَجِّكَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, மேலங்கி அணிந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவரது அங்கியில் நறுமணத்தின் அடையாளம் இருந்தது. அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டுவிட்டேன். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்), பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ, பலருக்கு மத்தியில்) அருளப் பெறும்போது, (துணி போன்றவற்றால்) அவர்களது தலைக்கு மேல் நிழலிட்டு அவர்களை உமர் (ரலி) மறைப்பார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெறும்போது அவர்கள்மீது இடப்படும் துணிக்குள் நான் எனது தலையை நுழை(த்துப் பார்)க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்” என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்றது, உமர் (ரலி) துணியால் அவர்களை மறைத்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அந்தத் துணிக்குள் எனது தலையை நுழைத்து, அவர்களைக் கூர்ந்து நோக்கினேன். நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீயின்போது ஏற்படும் சிரம நிலை அவர்களைவிட்டு) விலகியபோது, “சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள்.

உடனே அவர்களிடம் அந்த மனிதர் (வந்து) நின்றார். அப்போது நபி (ஸல்), “உமது அங்கியைக் களைந்து கொள்க; உம்மீதுள்ள நறுமணத்தின் அடையாளத்தைக் கழுவிக் கொள்க. நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)

Share this Hadith:

Leave a Comment