حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ أَبِي نَضْرَةَ قَالَ
كَانَ ابْنُ عَبَّاسٍ يَأْمُرُ بِالْمُتْعَةِ وَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَنْهَى عَنْهَا قَالَ فَذَكَرْتُ ذَلِكَ لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَقَالَ عَلَى يَدَيَّ دَارَ الْحَدِيثُ تَمَتَّعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَامَ عُمَرُ قَالَ إِنَّ اللَّهَ كَانَ يُحِلُّ لِرَسُولِهِ مَا شَاءَ بِمَا شَاءَ وَإِنَّ الْقُرْآنَ قَدْ نَزَلَ مَنَازِلَهُ فَ ”أَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ “ كَمَا أَمَرَكُمْ اللَّهُ وَأَبِتُّوا نِكَاحَ هَذِهِ النِّسَاءِ فَلَنْ أُوتَى بِرَجُلٍ نَكَحَ امْرَأَةً إِلَى أَجَلٍ إِلَّا رَجَمْتُهُ بِالْحِجَارَةِ
و حَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ فَافْصِلُوا حَجَّكُمْ مِنْ عُمْرَتِكُمْ فَإِنَّهُ أَتَمُّ لِحَجِّكُمْ وَأَتَمُّ لِعُمْرَتِكُمْ
இப்னு அப்பாஸ் (ரலி) ஹஜ்ஜுத் தமத்துஉ செய்யுமாறு உத்தரவு இடுபவர்களாகவும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அதற்குத் தடை விதிப்பவர்களாகவும் இருந்தனர்.
எனவே, நான் இதைப் பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கூறி(தீர்ப்புக் கோரி)னேன். அதற்கு ஜாபிர் (ரலி), “சரியான ஆளிடம்தான் இந்த விஷயம் வந்துள்ளது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுத் தமத்துஉ செய்துள்ளோம். பின்னர் உமர் (ரலி) (ஆட்சிக்கு) வந்தபோது, ‘அல்லாஹ், தன் தூதருக்கு, தான் நாடியதை தான் நாடிய ஒரு காரணத்திற்காக அனுமதித்துவந்தான். ஆனால், குர்ஆன் அதற்குரிய உயர் நிலையில் உள்ளது. ஆகவே, ‘அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் அவன் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளபடி முழுமையாக்குங்கள்’ (2:196).
பெண்களின் (முறையான) திருமணத்தை உத்தரவாதப்படுத்துங்கள். இனிமேல், தவணை முறையில் (குறிப்பிட்ட காலம்வரைக்கும் என்று) ஒரு பெண்ணை மணமுடித்தவர் (என்னிடம்) கொண்டுவரப்பட்டால், அவரைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று உமர் (ரலி) அறிவிப்புச் செய்தார்கள்” என்பதாக ஜாபிர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)
குறிப்பு : ஹம்மாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “…எனவே, உங்களது உம்ராவிலிருந்து ஹஜ்ஜைத் தனியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் ஹஜ்ஜையும் முழுமையாக்கும்; உங்கள் உம்ராவையும் முழுமையாக்கும்” என உமர் (ரலி) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.