حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ حَفْصَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ إِنِّي لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ
و حَدَّثَنَاه ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ حَفْصَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ لَمْ تَحِلَّ بِنَحْوِهِ
நான் (ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்), “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டு விட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து அந்தப் பிராணியை) பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)
குறிப்புகள்:
காலித் பின் மக்லத் (ரஹ்) வழி அறிவிப்பு, ““அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருக்கிறீர்களே? என்று நான் கேட்டேன் … ” என ஆரம்பமாகிறது.
முஃப்ரித் = ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் பூண்டவர்
காரின் = உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் சேர்த்து ஒரே இஹ்ராம் பூண்டவர்