அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2183

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏
‏أَبَا جَمْرَةَ الضُّبَعِيَّ ‏ ‏قَالَ ‏ ‏تَمَتَّعْتُ ‏ ‏فَنَهَانِي نَاسٌ عَنْ ذَلِكَ فَأَتَيْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَمَرَنِي
بِهَا ‏
‏قَالَ ثُمَّ انْطَلَقْتُ إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏فَنِمْتُ فَأَتَانِي آتٍ فِي مَنَامِي فَقَالَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ قَالَ فَأَتَيْتُ ‏ ‏ابْنَ
عَبَّاسٍ ‏ ‏فَأَخْبَرْتُهُ بِالَّذِي رَأَيْتُ فَقَالَ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ ‏ ‏أَبِي الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் தமத்துஉ ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யக் கூடாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அவர்கள் அதைச் செய்யுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.

பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி, “ஒப்புக் கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலக்காத, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)” என்று கூறினார்.

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காஸிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2182

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا
‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏
‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَذِهِ عُمْرَةٌ ‏ ‏اسْتَمْتَعْنَا ‏ ‏بِهَا فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏فَلْيَحِلَّ
الْحِلَّ كُلَّهُ فَإِنَّ الْعُمْرَةَ قَدْ دَخَلَتْ فِي الْحَجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

“இது, நாம் (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமிடையே இடைவெளி விட்டுப்) பயனடைந்த
உம்ராவாகும். ஆகவே, (உங்களில்) எவரிடம் பலிப் பிராணி இல்லையோ அவர்
முழுமையாக இஹ்ராமிலிருந்து விடுபடட்டும். ஏனெனில், மறுமை நாள்வரை
ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2181

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏
‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏وَقَدِمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ وَأَمَرَ
أَصْحَابَهُ أَنْ يُحَوِّلُوا إِحْرَامَهُمْ بِعُمْرَةٍ إِلَّا مَنْ كَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘தூ தவா’ எனும்
பள்ளத்தாக்கில் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். துல்ஹஜ் நான்காவது நாள்
மக்காவிற்கு வந்து, தம் தோழர்களில் பலிப் பிராணியைத் தம்முடன்
கொண்டு வந்தவர்கள் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக
மாற்றிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2180

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّدُوسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَيُّوبُ ‏
‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ لِأَرْبَعٍ ‏ ‏خَلَوْنَ ‏ ‏مِنْ الْعَشْرِ وَهُمْ يُلَبُّونَ بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ
يَجْعَلُوهَا عُمْرَةً

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)
பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக தல்பியாச் சொன்னவர்களாக
(மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக
ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2179

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ
الْبَرَّاءِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏
‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَقَدِمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ فَصَلَّى الصُّبْحَ وَقَالَ
لَمَّا صَلَّى الصُّبْحَ ‏ ‏مَنْ شَاءَ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَجْعَلْهَا عُمْرَةً ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ الْمُبَارَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو شِهَابٍ ‏
‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ كَثِيرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا
‏ ‏رَوْحٌ ‏ ‏وَيَحْيَى بْنُ كَثِيرٍ ‏ ‏فَقَالَا كَمَا قَالَ ‏ ‏نَصْرٌ ‏ ‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ ‏
‏وَأَمَّا ‏ ‏أَبُو شِهَابٍ ‏ ‏فَفِي رِوَايَتِهِ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُهِلُّ ‏ ‏بِالْحَجِّ وَفِي
حَدِيثِهِمْ جَمِيعًا فَصَلَّى الصُّبْحَ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏خَلَا ‏ ‏الْجَهْضَمِيَّ ‏ ‏فَإِنَّهُ لَمْ يَقُلْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறி, துல்ஹஜ் மாதம்
நான்காவது நாள் (காலை மக்காவிற்கு) வந்து, சுப்ஹுத் தொழுகை
தொழுவித்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும், “தமது இஹ்ராமை
உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர் அதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும்”
என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ரவ்ஹு பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின்
அறிவிப்புகளில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகத் தல்பியாக்
கூறினார்கள்” என்று நஸ்ரு பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில்
இடம்பெற்றதைப் போன்றே உள்ளது.

அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காகத் தல்பியாக் கூறினோம்”
என்று காணப்படுகிறது.

நஸ்ரு பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும்
“அல்பத்ஹா எனுமிடத்தில் ஸுப்ஹுத் தொழுதார்கள்” எனும் குறிப்பு கூடுதலாக
இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2178

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الْأَرْضِ وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا
‏ ‏بَرَأَ ‏ ‏الدَّبَرْ وَعَفَا ‏ ‏الْأَثَرْ ‏ ‏وَانْسَلَخَ ‏ ‏صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ ‏ ‏اعْتَمَرْ فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً ‏ ‏فَتَعَاظَمَ ‏ ‏ذَلِكَ عِنْدَهُمْ
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ

அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுப் பருவ மாதங்களில் உம்ராச் செய்வது
பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் எனக் கருதியிருந்தனர்.
(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை
விதிக்கப்பட்ட புனித மாதங்களாக வழக்கில் இருந்ததால்) முஹர்ரம்
மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ்
பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து,
காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ராவை நாடியவர், உம்ராச் செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர்.

நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள்
காலை, ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது
இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது.

இதனால், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்), “எல்லாமும் அனுமதிக்கப்படும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)