அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2183

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏
‏أَبَا جَمْرَةَ الضُّبَعِيَّ ‏ ‏قَالَ ‏ ‏تَمَتَّعْتُ ‏ ‏فَنَهَانِي نَاسٌ عَنْ ذَلِكَ فَأَتَيْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَمَرَنِي
بِهَا ‏
‏قَالَ ثُمَّ انْطَلَقْتُ إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏فَنِمْتُ فَأَتَانِي آتٍ فِي مَنَامِي فَقَالَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ قَالَ فَأَتَيْتُ ‏ ‏ابْنَ
عَبَّاسٍ ‏ ‏فَأَخْبَرْتُهُ بِالَّذِي رَأَيْتُ فَقَالَ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ ‏ ‏أَبِي الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் தமத்துஉ ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யக் கூடாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அவர்கள் அதைச் செய்யுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.

பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி, “ஒப்புக் கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலக்காத, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)” என்று கூறினார்.

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காஸிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்)

Share this Hadith: