و حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ:
أَنَّ الْأَنْصَارَ كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا هُمْ وَغَسَّانُ يُهِلُّونَ لِمَنَاةَ فَتَحَرَّجُوا أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَكَانَ ذَلِكَ سُنَّةً فِي آبَائِهِمْ مَنْ أَحْرَمَ لِمَنَاةَ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَإِنَّهُمْ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ حِينَ أَسْلَمُوا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ)
அன்ஸாரிகளும் ஃகஸ்ஸான் குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் பூண்டு தல்பியா கூறுபவர்களாய் இருந்தனர். ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவது அவர்களின் மூதாதையரிடையே நிலவிவந்த மரபாக இருந்தும், அதை அவர்கள் பாவமாகக் கருதினர். அன்ஸாரிகள் இஸ்லாத்தைத் தழுவியபோது, அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். இதுதொடர்பாகவே அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமன்று. யார் கூடுதலாக நன்மை செய்கிறாரோ (அவருக்கு) அல்லாஹ் நன்றி பாராட்டக்கூடியவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (2:158) எனும் வசனத்தை அருளினான்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)